Skip to main content

1940

யூதர்களே 1940 களில் உங்கள் மீது திணிக்கப்பட்ட வன்முறையை எதிர்த்து பாஸிஸ்ட்டுகள், நாஜிக்கள், போர் வெறியர்கள் தவிர்த்து ஜனநாயகத்தை, சமாதானத்தை விரும்பிய வர்களின் உலகமே உங்கள் பக்கம் நின்றது. 

நீங்கள் 60 லட்சம் பேர் பாசிச ஆரிய இன வெறியால் மிகக்கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டீர்கள்.. அந்த துயரை உங்களோடு சேர்ந்து உலகமே அனுபவித்தது. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நூற்றுக்கணக்கான திரைபடங்கள் லட்சோப லட்ச கண்டனங்கள். உங்களை இன்னலிலிருந்து மீட்க எத்தனை ஆயிரம் நேசப்படைகள் தங்கள் இன்னுயிரை தந்து உங்களில் எஞ்சியவர்களை மீட்டனர் என்பதை மறந்த சமூகமாக மாறிவிட்டீர்களே இது எவ்வளவு பெரிய வரலாற்று துயரம், 

பல ஆயிரம் ஆண்டுகளாக நாடற்று பல நாடுகளில் உங்களை தக்க வைத்துகொண்ட வரலாறுகளை மறந்துவிட்டீர்களா? இரண்டாம் உலகப் போரின் முடிவு நேசப்படைகளுக்கு சாதகமாக அமையாமல் போயிருந்தால் யூதர்களின் இருப்பு இந்த பூமியில் என்னவாக இருந்திருக்கும்? இந்த வரலாற்றுக் கேள்வி எவ்வளவு பயங்கரமானது

(உங்களுக்கு விடுதலை தர வந்த யூதர்களின் அரசன் என்று தன்னை சொல்லிக்கொண்ட இயேசுவால் முடியாததை) 1947ல் யூத மக்களுக்கு சொந்தமாக ஒரு நாடு வேண்டும் என்பதற்காக பாலஸ்தீனத்தின் 56% நிலத்தை தனியாகப் பிரித்து உங்களை அதில் குடியேற்றம் செய்து அதற்கு இஸ்ரேல் என பெயரிட்டதை சனநாயக மாண்புள்ள அன்றைய இந்தியா அதை எதிர்த்தது வரலாறு. ஆனால் 1950ல் அதை அங்கீகரித்தது என்பதும் வரலாறு. 

அந்த காலம் முதலே நீங்களும் இன வெறியாளர்களாக மாறிவிட்ட அநீதியை உங்களால் உணர முடிகிறதா இல்லையா? உங்கள் வரலாற்று துயரத்தை 1934- 1945 பொறுக்க முடியாத லட்சக்கணக்கானவர்களில் ஒருவனாக நானும் கூட ஒரு முழு நாவலையே மரப்பாலம் எழுதியிருக்கிறேன். இப்போது எழுதிக்கொண்டிருக்கிற நாவலிலும் அந்த துயரங்களை பதிவு செய்திருக்கிறேன். என்கிற ஆதங்கத்தில் என்னால் கேட்க முடியும். 

வரலாற்று காலம் முதலே அந்த நிலத்துக்கு சொந்தக்காரர்களான பாலஸ்தீனியரை அழித்தொழிக்கும் இன வெறியர்களாக நீங்கள் மாறியது சரியா? பல்லாயிரம் பாலஸ்தீனியரை கொன்று, பல நூறு கிராமங்களை அழித்து, பாலாஸ்தீனத்தின் 78% நிலபரப்பை உங்களுக்கு சொந்தமாக்கிக்கொண்டது சரியா? தற்போது வெறும் 7 சதுர கிமீ எல்லைக்குள் பாலாஸ்தீனியரை முடக்கியது நியாயமா? 2008க்கு பிறகான தாக்குதலில் மட்டும் ஏறக்குறைய 1.5 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற சுதந்திர நாட்டை உருவாக்கிய ஐக்கிய நாடுகள் சபை பாலாஸ்தீனத்துக்கான நியாயத்தை வழங்குவதில் என்ன நியாயமாய் நடந்திருக்கிறது. வளைகுடா பகுதியின் ரவுடியாக இஸ்ரேல் மாறியிருக்கிறது அதற்கு அமெரிக்கா உடந்தை. 

இப்போது நடக்கும் சண்டையில் போர் குற்றங்களில் இஸ்ரேல் ஈடுபடுகிறது. வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசுவது, நிவாரணமுகாம்கள் மீது குண்டு வீசுவது, மருத்துவ ஆம்புலான்சுகள் மீது குண்டுகள் வீசுவது…. பாலஸ்தீனியர்களின் நிலப்பரப்பையும் சேர்த்து அகண்ட இஸ்ரேல் என அறிவிப்பது இதெல்லாம் வரலாற்று பிழை இல்லையா?  இதற்க்கெல்லாம் போர் தீர்வா? அப்பாவி மக்கள் இருபக்கத்திலும் கொல்லப்படுகிறார்கள். போருக்கு வெளியே உள்ள மக்கள் நிலைமைகளை சரியாக புரிந்துக்கொள்வதன் மூலம் நியாயத்தின் பக்கம் உலகம் அணி திரள வேண்டும் போர் நின்று சமாதனத்துடன் நியாயங்களும் சனநாயக வழியில் தீர்க்கப்பட வேண்டும்.

Comments

Popular posts from this blog

உன்னை போல் பிறரையும் நேசி

புளிப்பின் சுவை தெரியாமலே , மாங்காய் புளிக்கும் என்பது எவ்வளவு முட்டாள் தனமோ ! அதுபோலவே நம் வாழ்வின் பொருள் தெரியாமலே வாழ்வதும் பிதற்றுவதுவும் , வாழ்வில் முழுமைபெறாததும்! அப்படியானால் நாம் வாழ்வது கற்பனை,கனவில்தான். [உண்மை ,நினைவு ,சுயம் ,நிஜம் ] என்பது தெரிந்து செய்வதுதானே இந்த பொய்யான வாழ்வுக்கே எத்தனை முகங்களை ஒரு மனிதன் வெளிப்படுத்துகிறான். நடிப்பதை நிறுத்துவோம் . உன்னை போல் பிறரையும் நேசி {[இந்த சின்ன வார்த்தைக்குள் அத்தனையும் முடிந்து விடுகிறது ]} அப்படியானால் உன்னை நேசிக்கிறாய். இல்லையேல் உன்னையே நீ உணரவில்லை.

sanathanam

பிராம்மணீயம்“வர்ண தர்மத்தைப் பற்றி தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்குப் பிராமணன்தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும், தேச க்ஷேமமும், லோக க்ஷேமமும் தந்து வந்த தர்மம் குலைந்து போனதற்கு பிராம்மணன்தான் பொறுப்பாளி.பிராமணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் விட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமங்களை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான். கிராப் வைத்துக் கொண்டான். ஃபுல்ஸுட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட வேதப்படிப்பை விட்டு வெள்ளைக்காரனின் லௌகிகப் படிப்பில்போய் விழுந்தான். அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு, அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் ‘காபி’ அடித்தான். வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன்வரை ரக்ஷித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும், புதிய மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்து விட்டான்.”“ரொம்பவும் பகுத்தறிவு பகுத்தறிவு என்று சொல்

நான் கடவுளானால்

நான் கடவுளானால் என்னை வணங்கு பவர்களை கொன்றுவிடுவேன் வரம் கேட்கும் மடையனை தீயிலிடுவேன்_மற்றவனை குறை சொல்லும் சனியனை ஊமை யாக்குவேன் _தேவை இல்லாத கட்டுபாடுகளை ,கோட்பாடுகளை அவிழ்த்தெரிவேன் ஆடை கண்டுபிடித்தவனை முதலில் அறுத்தெறிவேன் தன்னை மட்டும் நேசிக்கும் தன்னலமில்லாத வனை நான் வணங்குவேன் ஏனென்றால் நானே சுயநலவாதி