Skip to main content

Posts

Showing posts from July 30, 2023

நாத்திகம் என்பது கடவுள் மறுப்பா

  நாத்திகம் என்பது கடவுள் மறுப்பா கடவுள் என் தூரத்து காதலியாக இருந்து விட்டு போகலாம்  அவள் எனக்கு கடிதம் அனுப்பப் போவதில்லை  முத்தங்களை தரப்போவதில்லை என்னை அணைக்கப் போவதில்லை என் பசியை ஆற்றப் போவதில்லை என் பணத் தேவைகள் எதையும் அவள் செய்யப் போவதில்லை அவ்வப்போது என் உளவியலில் சமநிலை தவறுதலை வேண்டுமானால் சரி செய்து கொண்டிருப்பாள் ஒரு தூரத்தின் சமவெளியில் பச்சை நிற சுடிதார்கள் எல்லாம் என் காதலியை ஞாபகப்படுத்தலாம் மல்லிகை வாசங்கள் எல்லாம் அவள் வாசமாகவே மாறிப்போனது நேற்று எனக்காக பரிந்து பேசிய இரண்டு நண்பர்களை கடவுளின் தூதனாகவே நான் பார்க்கிறேன் என் ரத்தத்தை துடைத்து பசியாற்றி என் துக்கங்களோடு பகிர்ந்து கொண்ட ஒரு சகோதரனின் பதற்றத்தில் யாரைக் காண்பது என் துக்கங்களை விசாரித்துக் கொண்டிருந்த தோழியின் உள்ளங்கை ஈரத்தில்  யாரை நினைப்பது.... கடவுள்கள் போதும் வருவதில்லை அவளைப் போலவே இருவரும் ஒன்றுதான்  பருப்பொருள் அல்ல நினைவுகள் ஏக்கங்களின் கற்பனை உருவங்கள் நாத்திகம் கடவுள் மறுப்பா  இல்லவே இல்லை  நாத்திகம் மத மறுப்பு....

ஜனநாயகம்

 சமூக ஜனநாயகம் உருவாகாமல் அரசியல் தாக்கத்தில் பெரும்பான்மையின் அழுத்தங்களை குறைக்க முடியாது , இந்தியாவைப் பொறுத்தவரையில் சமூக ஜனநாயகம் உருவாவதற்கு இங்கு இருக்கும் பிரிவினைகளின் சிக்கல்களை தீர்த்தாக வேண்டும், இனம் சார்ந்து மதம் சார்ந்து சாதி சார்ந்து  சாதி உட்பிரிவுகள் என ஆயிரக்கணக்கான பிரிவினைகளை ஒன்று கூட்டாமல் சமூக ஜனநாயகம் சாத்தியம் இல்லை. சமூக ஜனநாயகம் சாத்தியமில்லாமல் அரசியல் ஜனநாயகம் ஒருபோதும் சாத்தியமில்லை அங்கு பெரும்பான்மையே நிலை நிறுத்தி இருக்கும் இந்தியா என்று ஒன்று கூடி இந்த ஆசிய துணை கண்டத்தில் சொல்ல ஆரம்பித்து எத்தனை ஆண்டுகள் ஆகியும் என்ன ஒன்று கூடல் நடந்து விட்டது ,அதேபோல் மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டும் தமிழ்நாடு பொருத்தவரையில் மொழியால் என்ன ஒன்று கூடல் நடந்து விட்டது..... இதுவரையில்  மொழி ஒரு தனிமனிதனுக்கு எந்த விதத்தில் நன்மை பயக்குறது என தெரியவில்லை, அல்லது ஒரு சமூகத்திற்கு என்ன பயனை தருகிறது எனவும் தெரியவில்லை மொழி என்பது அடையாளம் அல்ல இந்த பிரபஞ்சத்தில் உயிர் என்பதைத் தவிர ஒன்று கூடலுக்கு வேறு எந்த அடையாளங்களும் இல்லை என்பதே உண்மை... மொழி வெறும் தொடர்பு கரு