Skip to main content

Posts

Showing posts from January 11, 2015

பதுங்கும் கால இடைவேளை

மக்கள் தூங்கிக்கொண்டு இருக்கிறார்களா தூங்குவது போல் நடிகிரார்களா இது எத்தனை ஆண்டுகாலம்தான் நீடிக்கும் ! , இந்திய மக்களுக்கு மதம் ,சாதி,குடும்பம் ,மொழி என்ற போதை பொருட்கள் ஊட்டப் பட்டுக் கொண்டே இருக்கிறது..... சாவேஸ் சொல்லுவான் "இன்னும் இழப்பதற்கு காலமில்லை என்று ".  தயவுசெய்து விளித்து கொள்ளுங்கள், இந்திய சமூகமே நமக்கென்று ஒரு இதயம் இருக்கலாம் ஆனால் புரட்சிக்கு அகில அண்டத்திலும் ஒரே இதயம்தான், கொக்குகலைப் போல இரைக்காக காத்திருப்பதல்ல சிறுத்தைகளை போல தேடி அலையுங்கள்,காத்திருத ்தலில் கால்கள் முடமாகிவிடலாம் அல்லது தூக்கம் கலையாமலும் போகலாம் 100 ஆண்டுகளாக புகைந்து கொண்டிருக்கும் கரிமூட்டத்தால் பயனில்லை நெருப்பு பற்றிஎறிய வேண்டும் ..... இன்னும் 100 ஆண்டுகள், நம் சகோதர சகோதிரிகள் கண்ணீர் வடிப்பதை பார்த்துக்கொண்டே புரட்சிக்காக காத்திருப்பதில் பயனில்லை..... புரட்சியாளன் என்பவன் உறவுகளுக்குள்ளும் உடைமைகளுக்குள்ளும் தூங்கு பவன் அல்ல ... உரிமைகளுக்காக உறங்காத வன். வலிய நீந்தாமல் ஆற்றின் நீர் வடிய காத்திருப்பது நல்ல நிலையல்ல எதிர் கரையின் வெளிச்சம் மங்க்குவத்ர்க்குள் .......... தூக்கத

இரண்டு தவறிய அழைப்பு

என் கைப்பேசியில் ஒருவன் அழைத்துக்கொண்டே இருக்கிறான்........  ஆறு நாட்களாக அதன் அலறல் சத்தம் ஓயவே இல்லை  sms_ சிலும் வாட்சப்பிலும் முகம் காட்டுகிறான்  என் அரையோ உஷ்ணம் ஏறிக்கொண்டே போகிறது கனவில் கூட கைப்பேசி கத்துவதை நிறுத்த வில்லை விடிந்து பார்க்கிறேன் இரண்டு தவறிய அழைப்பும் ஒரு குறுஞ்செய்தியும் மற்றவை எல்லாம் கற்பனைதான் நான் ........

முக்கோண முட்டை

முக்கோண முட்டைகளை  சம்மதிக்காத உலகமிது...  கடுப்பாடே பரிநாமத்தடை??? முத்தமிடவும் மறந்து விட்டேன்  இந்த கூறுகெட்ட இனத்தால்!!! குப்புற விழுந்து கிடக்கிறேன் சோற்று பருக்கைகளுக்காக

என் மூச்சு துவாரத்தில் ஒரு சுண்டெலி

ஒரு சுண்டெலி என் மூச்சு துவாரத்தில் நுழைந்து விட்டது  உள்ளிருந்து கீச்சிடுகுறது...........  அசை வற்றுள்ளேன், அவள் சரியான தூரத்தில் நிற்கிறாள்  என் நுனிநாக்கு தொட்டுவிடும் இடைவேளை. அவளோ மூச்சற்று இறந்து போனாளால் ஸ்பரிச தொடுதளுக்காய் இருளும் ஒளியும் பிணைந்து கிடக்கிறது சவம் போல ஒலியற்று நிற்கிறது சுற்றம் ஒரேஒரு எலி மட்டும் மூச்சிரைக்க அறையில் சுற்றி வருகிறது............... எந்த காதலர் களுக்கும் கிடைத்து விடாத காலம் கூட்டி கொடுத்த கனவு அறை, அவள் ஸ்தனங்கள் திமிறுகிறது என் கைகளை பார்த்தவாறே, எந்த சூழ்நிலை க்காகவும் விட்டுவிட முடியாத நேரமது , மூச்சிரைக்கும் எலி வடகிழக்கின் ஓரத்தில் முறைக்கிறது ,, சாயிந்து நின்றவள் என்நேராய் திரும்பி விட்டாள் இன்னும் ஒருநொடிக்குள் லச்சதில் ஒரு மணித்துளியில் சந்திதுவிடுவோம் .... தூரம் சிறிதாயினும் கடந்து விட யுகம் வேண்டுகிறது அவள் இடது தொடையின் பின்புறத்தில் தொடுகையில் ஒரு எலி என் மூச்சு துவாரத்தில் நுழைந்து விட்டது நான் காத்திருந்த பொழுதும் வலியுடன் நிலத்தில் வந்து விழுந்த நொடியும் வீணாய் போனது எலி கீசிட்டு கொண்டே இருக்கிறது .................??????? என் பெ

ஒருகவிதை

அவள் கூந்தலில் ஒருகவிதை  தொங்குகிறது,  நெற்றியில் ஓன்று , இரண்டு கண்களில் உருண்டு நிற்கிறது சில கவிதைகள்,  கண்ணக் குழியில் ஒன்றும் உதட்டில் இரண்டும் ஒழுகிறது கவிதை . தொண்டைக் கிடங்கிலும் மார்பக மேட்டிலும் குப்புற கிடக்கிறது மூன்று கவிதைகள். இடை நெளிவுகளிலும் தொப்புள் குட்டையிலும் நெளிந்து கொண்டிருக்கிறது ஐந்தாறு கவிதைகள் . பெண்மையிலும் புட்டத்தின் வீக்கத்திலும் தலைகீழாய் நிற்கிறது நான்கு கவிதைகள். தொடையில் சிலவும் குதிங்காலில் சிலவும் கவ்விக்கொண்டிருக்கிறது . கவிதையுடன் உலாவரும் பெண் கண்களில் கவலை மல்லார்ந்து கிடக்கிறது _இவன் என்று விடுவான் கவிதை எழுதுவதை..........