Skip to main content

Posts

Showing posts from February 7, 2016

எழுத்து

என் எழுத்து எனக்கான தேடுதல் அதில் சரி தவறு என்பதெல்லாம் என் இயழ்பு. எழுத்து விரிவதும் சுருங்கி கிடப்பதும் காலத்தின் பாத அழுத்ததை பொறுத்து என் கற்பணைகள் எந்த பொழுதுக்கும் இசையும் என்பதில் இல்லை வெட்டவெளியில் உருண்டோடும் போது நினைப்பதை எல்லாம் ஊதித்தள்ளுகிறேன் சில காற்றில் கணமேற்றும் சில என்னிடமே திரும்பும்

இருப்பு

கேள்வி எங்கிருந்து வருகிறதோ அங்கே பதில் கேள்வி நான் இருக்குமென்பது வாதமென்றால் எனக்கில்லை இல்லை என்றால் எனக்கு இருக்கும். இல்லாததிலிருந்து வந்த இருப்பிலே இருந்து இருப்பதையும், இருந்து இல்லாததையும் வாதிப்பேன், இருக்குமென்பேன் இல்லை என்பேன் முடிவு இல்லாததாய் இருந்த ஒன்று என சொல்லி ஒன்றுமில்லை என்பேன் அதிலே ஒன்று இருக்கிறதென்பேன்  கேள்வி எங்கிருந்து வருகிறதோ அங்கே பதில் கேள்வி நான் இருப்பதில் ஒன்றுமில்லை என்பேன் ஆனால் இல்லாததில் ஒன்று இருக்கிறதென்பேன் தொடக்கமும் முடிவும் ஒன்றுதான் எங்கே  முடிகிறதோ அங்கே தொடங்குகிறது தூரமில்லை எதுவும் தூரமில்லை ஒரேயிடத்தில் தான் இருக்கிறது எதுவும் தூரமில்லை கேள்விக்கு பதிலுடன் கேள்வியாய்?

நாறும் சோறு

பிறந்ததிலிருந்து கண்கள் அழுதுகொண்டே இருக்கிறது நீரும் வற்றிய பாடில்லை பிறப்பின் கர்மமும் ஓய்ந்ததாய் இல்லை கழுத்து இருக்கப்பட்டு மரத்தின் நுனியில் தொங்கவிடப்பட்ட வாழ்க்கை நரம்புகள் கிழிந்து ரத்தம் கொட்டித் தீர்த்தும் அடங்கி விடாத அழுகை திரும்பிய பக்கமெல்லாம் கொட்டி கிடக்கும் சோகக்குழி திண்ணும் உணவெல்லாம் நாற்றமெடுக்கும் மலம் கணவு வரை நீளும் மலச்சுமை திராவிடம் தெருவில் வீசியது இடதுகையோ சூம்பி நிற்கிறது வலதோ வலுக் கட்டாயமய் உறுப்பை பிடித்து தொங்குகிறது மதம் அம்மணமாய் அழைகிறது கழுத்து குழியில் ஓர் அதிசயம் நிகழவேண்டும் வலிக்கும் போதாவது கத்ததெறிய

பன்னி

அரபு தேச வாசனையில் குளிக்க வேண்டும் கொள்ள புறத்து நாத்தம் கொமட்டுதுன்ன பய பேளாமலாஇருக்கான் இதவிட நாத்தம் உலகுல இல்லாமலா இருக்கு செத்தபெறவு வருமே ஒரு நாத்தம் அத தூக்கிட்டுதான திரியுரான் எனக்கும் மூக்குண்டு அதுல வாசனையுண்டு அரபு தேச வாசணையில் குளிக்க வேண்டும் எங்கவீட்டு பன்னிய சோப்புபோட்டு அலசவேண்டும் முத்த மிட்டு செல்லபெரிடனு கிளிஞ்ச சட்டைய கிளிக்காம தொவச்சு பிஞ்ச செருப்ப போடாம போட்டு அரபு தேச வாசணையோட அங்காடியெல்லாம் சுத்தனும்

கா

கடவுள்களெல்லாம் காதலில் பிணைந்து கிடக்க கோயில் சிலையெல்லாம் காமத்தில் வியர்த்து குளிக்க மானுட கலவி (காதல்) மட்டும் மண்டியிட்டு .... இந்திய கலாசாரத்தில் நளினம் காட்டும் சதை அடிவயிற்றை நக்கி போகும் மேற்கத்திய பெண்ணிண் நிழலில் வடிகிறது இனமும் மொழியும் சாதியும் மதமும் ஆணுறுப்பின் விரிவுக்கு அவசிமில்லைதான் ,..!