Skip to main content

Posts

Showing posts from November 2, 2014

குத்தவச்ச குமரி

வாயகட்டி வயத்தகட்டி நான் வேதச்சன் வாய்க்காவெட்டி வரப்புவெட்டி நீர்பாச்சன் கண்ணுரெண்டும் துண்கல மழவருமொ வராதோ  மனசுரெண்ட உருளுதே  வெதயொடு சேத்து யென போதச்சன் தாய் கருவோடு இருந்த வாசனைய நா ஒனந்தன் வரப்பு மேல தலைவச்சு கண்ணசந்தா தாயி மடிமாரி கதகதப்ப இருப்பா பச்ச பால் வசன வயக்காடு புழுதியில மணக்கும் எங்கிருந்தோ வந்த வெள்ளசட்டக்காறேன் நெல்லுக்கு வெல சொன்னா உச்சி வெயிலுல சொக்கி நின்ன யெனக்கு கத சொன்னா பட்டினியில இல்லாத யென் வயிர 6 பெகுன்னா நா சொன்ன குத்தவச்ச குமரிக்கு கூட படுத்து யெந்தி சாதான் வயெரு வீன்கும்ன அசையாத கல்லுக்கு வீன்குறது அதிசயம் தாமல புள்ள பொக்காத பொம்பள ன்ன மானியம் வாக்ங்கிடு வாரேன்னா மாய மாயிட்டான்.

கடவுள்

கடவுள் அத்தனை படைப்புகளை விடவும் மிகசிறந்த முட்டாள்  அவனால் பெருமை கொள்ளாமல் இருக்க முடியாது  அவனால் பிச்சை எடுக்காமலிருக்க முடியாது  கூப்பிடும்போது கேட்கும் செவிடு  கண் தெரிந்த குருடன்  நமக்கு பயந்து ஒளிந்து கொள்ளும் கோழை

அவள் வாசமும்

அவள் வரும் சின்னஞ்சிறு பாதையில்  அக்குறுகிய நேரத்தில்  முத்தமிட நினைக்கையிலேயே  பாதையோ முடிவடைந்து விடுகிறது , ஒரு தனியறையில்  முதலாய் அவள் வாசமும் ஸ்பரிச தொடுதளிலும் சலனம் இல்லாமல் சப்தம் இறந்து விடுகிறது முத்தத்தின் இசை மட்டும் வளர்ந்து கொண்டே இருக்கிறது

ஒரு நாய்

ஒரு நாய் நாயின் குணத்தை அது சாகும் வரையில் வெளிப்படுத் துகிறது,நானோ என்னை என்னுள் உள்ளதை ஒருநாளும் உணர்ந்ததே இல்லை,அதை உணர விட்டதும் இல்லை,இந்த சமுதாயத்தால் என் கண்கள் இருக்க கட்டப் பட்டுள்ளது ஐயோ .............என் கண்கள்  இருக்க கட்டப்பட்டுள்ளது நான் விடுபட வேண்டுமெனில் என் மூளை நினைவிழக்க வேண்டும்........

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

பாரதியின் பெண்

பாரதி சமுதயத்திற்கும் மதத்திற்கும் உட்பட்ட பெண்ணையே விரும்புகிறான், உடன் கட்டை ஏறிய பெண்களை உத்தமிகள் என்பது கவனத்துக்குரியது . பெரியாரின் பெண்ணை கொஞ்சம் பாருங்கள் சர்வ தேசம் உடையவள், பாரதியின் பெண்மையோ வட்டமிடபட்டவள் பெண் என்பதற்காக....

பாதியிலேயே

பல நேரங்களில்  பாதியிலேயே இறந்து போக நினைக்கிறேன்  மரணமோ கேட்கும் போது வருவதுமில்லை  விரட்டும் போது போவதுமில்லை

வலிமை படைத்த கரங்கள்

நானும் ஒரு கைதிதான்  காலத்தின் சட்டதிட்டத்தில் இந்த பூமியே எனக்கொரு சிறைதான்  விரிந்து பரந்த என் சிந்தைக்கு பூமி தூசுதான், இந்த வாழ்நாள் சிறையை மீட்க எந்த வலிமை படைத்த கரங்கள் தேவை

ஒரு முத்தம்

ஒரு முத்தம் கொல்லுகிறது நித்தமும் முத்துகிறது  கத்தும் முன்பே சத்தத்தை தின்கிறது  சித்தம் சிதறுகிறது இதில்  புத்தமும் தோற்று போகிறது

இன்னமும் முடியவில்லை

என்னை யாரோ ! எழுதிக்கொண்டிருக்கிறார்கள்  நான் வசியப்பட்டுகிடக்கிறேன்  எனக்குள்  என்னை எதோ எழுதிக்கொண்டிருக்கிறது  என் கற்பனைகளை கூட எதோ வடித்துக்கொல்கிறது புலன்களும் புலம்பிக் கொண்டுதிரிகிறது முடிக்கப்படாத பல கவிதைகளில் இருந்து தெரிகிறது இன்னமும் முடியவில்லை

ஞாபகம் இருக்கிறது,

அவள்,  உதட்டின் ஓரத்தில்  முத்தமிட்டது மட்டும்  ஞாபகம் இருக்கிறது,  அருகே நெருங்கும் போதே  இருப்பை இழந்து விட்டேன் பரவசத்தின் காரணமில்லை காரண காரியமும் இல்லை முத்தமிட்டு கொண்டிருப்பது பெண் தான் என்பதையும் மறந்து விட்டேன் ஆண் என்பதையும் இழந்து விட்டேன்

அவள் உதட்டில் வடியும்

அவள் உதட்டில் வடியும்  ரத்தம்  என் வாய் நிறைய உள்ளது  கொஞ்சம் புளிப்பாகவும்  துவர்த்தும்  வழுவழுப்பாய் இருக்கிறது நாகங்கள் வேகமாக மோதிக்கொண்டோம் எந்த முத்த தொடுதலும் இல்லை

ஓடாத காலம்

நான் வேகமாக ஓடுகிறேன்  காலமோ எனக்கு முன்னானால்  நகர்ந்து கொண்டே ........ காலமற்ற நகர்தல்  முட்கலற்ற மணிக்கூண்டுகள்  ஓடாத காலம் இருந்தா சொல்லுங்கள் ஒரு நிமிடமாவது வாழ்ந்து விடுகிறேன்
மூன்று நாட்களுக்கு முன்புதான் அந்த மரத்தடியில், முதன் முதலாக முத்தமிட்டோம்  இன்றோடு நான்கு நாட்களாகிறது அவளை காணவில்லை யோனியிலிருந்து வெளியேறும் குழந்தையின் நகர்வுதான் நகர்ந்து கொண்டே இருக்கிறேன் ....... அந்த மரத்தில் இருந்து இலைகளெல்லாம் உதிந்து கொண்டே இருக்கிறது .......... பல நேரங்களில் எதையோ " சலசல" த்துகொல்கிறது வானத்தில் நட்சத்திரங்கள் எல்லாம் இடம் மாறுகிறது சூரியன் நகரநகர என் சூழ்நிலைகள் இன்னமும் மோசமாகிறது நான் இன்னமும் அழவில்லை அந்த மரத்தின் கிழக்கு நோக்கிய கிளையில் நீண்ட நேரமாக ஒரு காகம் கரைந்து கொண்டிருக்கிறது அவளை இன்று பார்த்துவிடுவேன் சில வேளையில் காகம் மிகச்சிறந்த முன் அறிவிப்பாலந்தான் நான் எழுந்து நிற்க வேண்டும் அந்த மரத்தில் உள்ள பூக்கள் சில தரையிலும் தலையிலும் கிடந்தன என் வலது தோள்பட்டையில் பிசுபிசுத்த திரவம் இருக்கிறது அதன் நாற்றமும் கததப்பும் உடலுக்கு தெரியவில்லை அந்த முத்ததின் சூடு தனிவதர்க்குள்........ நான் அழுது விட்டேன் நான் அழுவேன் .... ஒரு வேளை தொடரலாம் அவள் துற தேசம் போயிருப்பாளோ நான் தனிமை பட்டு போன
பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது