Skip to main content

Posts

Showing posts from January 31, 2016

பசிக்கிறது

உலக நாடுகளே உங்கள் பொரருளாதார சண்டையையும் ஆசையையும் விட்டுவிடுங்கள் எனக்கு பசிக்கிறது . உங்கள் ஆடம்பர கட்டிடங்களையும் கார்களையும் நிறுத்துங்கள் அனுஆயுதங்களையும் ஆடைகளையும் புதையுங்கள் எனக்கு பசிக்கிறது. உங்கள் கடவுள்களைகொன்று விடுங்கள் கவிதைகளையும் கட்டுரைகளையும் அறிவியலையும் காலகடத்து கருவியையும் அனுதாபத்தையும் உடைத்தெறியுங்கள், எனக்கு பசிக்கிறது. உங்கள் அழகியலையும் ஆண்மையையும் ஒதுக்கி வையுங்கள் வீரத்தையும் வரலாறையும் எறித்து விடுங்கள் சடங்கையும் சம்பரதாயத்தையும் ஒழுக்கத்தையும் மிதித்து தள்ளுங்கள் எனக்கு பசிக்கிறது. உங்கள் அழுகையும் கருத்துரையும்வேண்டாம் உங்கள் இரக்மெல்லாம் எங்கள் தொடை இடுக்கு வரைதான் தயவுசெய்து வழிவிடுங்கள் எனக்கு பசிக்கிறது.

மாயை

ஒரு நிகழ்வு மாயையாய் தோன்றுகிறது பிறிதொரு நேரத்தில் இருப்பாய் தெறிகிறது பின் முரன்பட்டு போகிறது மாயையும் இருப்பும் ஒன்றுபட்டு நிகழ்வாய் மாறுகிறது முரனாகிறது .......