Skip to main content

Posts

Showing posts from January 9, 2011

புல் (ஆல்கஹால் )

நரகத்தில் எனை தள்ளி, பவ்வியமாய் சொர்க்கத்தில் மிதந்துருளும் என்கணவா! ஆசை இன்றியே ,முரட்டு காமத்திற்கு எத்தனை தடவை இனங்கிஇருப்பேன் ஆசைகளை எல்லாம் துறந்தேன் சத்தியமாய் சொல்லுகிறேன் மார்கழி மாத இரவிலும் நித்திரைக்கு பயப்படுகிறேன் மன்னவன் தலை குனிந்தே வருவான் முத்தத்தால் நனையவேண்டிய முந்தானையில் மலக்கிடங்கை ஊரெல்லாம் சுமந்து வந்து என் முதுகிலே கொப்பளிப்பான் மல்லிகையும் மணம் நொந்து போகும் அளவுக்கு வாசனையும் தருவான் . அனேக நேரங்களில் , மனைவியையே பலாத்காரம் செய்த முதல் கணவன் நீயாகத்தான் இருக்க முடியும் . பல முறை சொல்லியும் எனது மூக்கும் கேட்டகவில்லை உனது வாயும் கேட்க்கவில்லை புல் (ஆல்கஹால் )ஆனாலும் புருஷன் என மாற்றிக்கொண்டேன்!

நாளை

எதிர் காலம் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் இன்றைய புரிதலும்,செயலும் தான் நாளைய பொழுது , நாளைக்காக இன்று விதைக்கிறேன் நாளை அறுவடை செய்யப் போகிறேன் ! நாளை என்பது விளைவு தான் !

சுமையும்தான்

என் எதிர்காலச் சுமை ஒன்றை இறக்கிவைத்து விட்டேன் உன்னை காதலிப்பதால் நிகல் காலச் சுமையில் பல ஏற்றி வைத்திருக்கிறேன் உன்னை காதலிப்பதால் ! சுகம் என்றதும் எண்ணம் சுமப்பது இணைப்பைத்தான் எனக்கோ உன் கண்களில் தெறித்து விழும் பார்வைச் சுகம்தான் சுமையும்தான் !

உன்னை போல் பிறரையும் நேசி

புளிப்பின் சுவை தெரியாமலே , மாங்காய் புளிக்கும் என்பது எவ்வளவு முட்டாள் தனமோ ! அதுபோலவே நம் வாழ்வின் பொருள் தெரியாமலே வாழ்வதும் பிதற்றுவதுவும் , வாழ்வில் முழுமைபெறாததும்! அப்படியானால் நாம் வாழ்வது கற்பனை,கனவில்தான். [உண்மை ,நினைவு ,சுயம் ,நிஜம் ] என்பது தெரிந்து செய்வதுதானே இந்த பொய்யான வாழ்வுக்கே எத்தனை முகங்களை ஒரு மனிதன் வெளிப்படுத்துகிறான். நடிப்பதை நிறுத்துவோம் . உன்னை போல் பிறரையும் நேசி {[இந்த சின்ன வார்த்தைக்குள் அத்தனையும் முடிந்து விடுகிறது ]} அப்படியானால் உன்னை நேசிக்கிறாய். இல்லையேல் உன்னையே நீ உணரவில்லை.

முத்தம்

வழுக்கட்டாயமாய்_ நான் கெஞ்சி வாங்கும் முத்தத்தை விட எண்ணமில்லா நிலையில் வழுக்கட்டாயமாய் _ நீ கொஞ்சி கொடுக்கும் முத்தம் சுகத்தின் மொத்தம் !

மனமெல்லாம் காதலிதான்

பொழுதின் விடியல் _ இரவு வேலையினால் தாமதமானது விழிப்பு நேற்று அரங்கேறிய திருமணத்தின் விளைவுதான் . அவசரமாய் எழுந்து ஆடைகளை சரி செய்யாமலே பல் துளக்கி ரோஜா இதழ் சாரினை பூசிவிட்டு ஊதா நிற Tசெட்டும் வெள்ளை நிற பேண்டும் போட்டுக்கொண்டேன் தலை வாரி ,பைக் சாவியை தேடி பதறி ஓடினேன் திருமணமானதை மறந்து. காத்திருக்கும் என் காதலியைத் தேடி. அம்மா ,அப்பா,உடன்பிறப்பைப் போல் இவளும் ஒட்டிக்கொண்ட ஒரு உறவு தானே தவிர மனமெல்லாம் காதலிதான் . திருமணம் ஒரு சடங்கை போல் இருந்ததே தவிர மனமெல்லாம் காதலிதான்

ரத்தம் குடிக்கும் காட்டேரிகளே

பெண் தெய்வங்களே ஆண்களை பலியாய் கேட்பதேன் முச்சந்தியில் சிதறும் தேங்காவாய் உடைப்பதேன் வரம் தருவாள் தேவி என்றோம் ம"ரண" வரம் தருவதேன் செய்யாத தவறுக்கோ பரிகாரம் செய்யச்சொல் வீர்கள் பரிகாரம் செய்தபின்னோ பரிதவிக்க விடுவீர்கள் புன்னகைத்து வரும் உங்கள் வார்த்தைகளை திறந்தால் பொய் புழுக்கள் நெளியும் விழிகளால் பேசி எங்கள் விழியன் ஒளி இலக்கச் செய்யும் குருட்டு தெய்வங்களே தாயாய் ,மகளாய் ,மனைவியாய் ஒளியாய் ,வானாய், காற்றாய் புகழ்ந்தும் ரத்தம் குடிக்கும் காட்டேரிகளே என்று புரியும் காதலும் ,காதலனும்                                                                                     ________...............பெலிக்ஸ்