Skip to main content

Posts

பகவத்கீதை சனாதனம்....?

பகவத்கீதை சனாதன நூலான பகவத்கீதையைத் தவிர எந்த ஒரு மதமும் தங்களது மத நூலை இவர்கள்தான் வாசிக்கனும் இவர்கள் வாசிக்கக் கூடாது எனக் கூறியதில்லை.  கீதா-தத்வவிவேசனி (கீதாபிரஸ்-கோரக்பூர்)உள்ள விளக்க உரை; பகவான் கீதையின் உபதேசத்தை நிறைவு செய்து,இனி அந்த உபதேசத்தைக் கற்பித்து,கற்பது முதலியவற்றின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் பொருட்டு,முதலில் தகுதியற்றவர்களின் இலக்கணங்களைக் கூறி,அவர்களுக்கு கீதோபதேசம் செய்யக் கூடாது என்கிறார்- इदं नातपस्काय नाभक्ताय कदाचन ।  न चाशुश्रूषवे वाच्यं न च मां योऽभ्यसूयति ॥ ६७॥ இதம் தே நாதபஸ்காய நாப க்தாய கதா சந I ந சாஸுஸ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோகப் யஸூயதி II 67 உனக்குக் கூறப்பட்ட இந்த ரஸஸ்யமான கீதோபதேசத்தை ஒருபோதும் தவம் இல்லாதவனுக்குச் சொல்லக்கூடாது. பக்தியில்லாதவனுக்கும் சொல்லக்கூடாது. கேட்க விரும்பாதவனுக்கும் சொல்லக்கூடாது. எவன் என்னிடம் குறை காண்கிறானோ அவனுக்கு ஒருபொழுதும் சொல்லக்கூடாது. -கீதா தத்வவிவேசனீ,அத்18.67-கீதா பிரஸ் இதை யாருக்கு போதிக்கலாம்? அவருக்கு என்ன தகுதி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மாளிப்பதற்காக,நான்கு வகையான மாசு உள்ளவர்களுக்கு உபதேசம்
Recent posts

திபெத்திய பீடபூமி (TIBETAN PLATEAU)

திபெத்திய பீடபூமி (TIBETAN PLATEAU) மேலே எதனால் விமானங்கள் பறப்பதை தவிர்க்கிறார்கள்? திபெத்தின் மலைப் பகுதி கொந்தளிப்பு அபாயத்தை அதிகரிக்கிறது, இது பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் ஆபத்தானது. இப்பகுதியில் குறைந்த வெப்பநிலை ஜெட் எரிபொருள் உறைபனியின் அபாயத்தை ஏற்படுத்துகிறது, இது கடுமையான விபத்துக்களுக்கு வழிவகுக்கும், இது ஜெட் எரிபொருள் ஓட்டத்திற்கான வெப்பநிலையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. The mountainous region of Tibet increases the risk of turbulence, making it disruptive for passengers and potentially dangerous. Low temperatures in the region pose a risk of jet fuel freezing, which can lead to severe crashes, highlighting the importance of temperature for jet fuel flow.

1940

யூதர்களே 1940 களில் உங்கள் மீது திணிக்கப்பட்ட வன்முறையை எதிர்த்து பாஸிஸ்ட்டுகள், நாஜிக்கள், போர் வெறியர்கள் தவிர்த்து ஜனநாயகத்தை, சமாதானத்தை விரும்பிய வர்களின் உலகமே உங்கள் பக்கம் நின்றது.  நீங்கள் 60 லட்சம் பேர் பாசிச ஆரிய இன வெறியால் மிகக்கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டீர்கள்.. அந்த துயரை உங்களோடு சேர்ந்து உலகமே அனுபவித்தது. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நூற்றுக்கணக்கான திரைபடங்கள் லட்சோப லட்ச கண்டனங்கள். உங்களை இன்னலிலிருந்து மீட்க எத்தனை ஆயிரம் நேசப்படைகள் தங்கள் இன்னுயிரை தந்து உங்களில் எஞ்சியவர்களை மீட்டனர் என்பதை மறந்த சமூகமாக மாறிவிட்டீர்களே இது எவ்வளவு பெரிய வரலாற்று துயரம்,  பல ஆயிரம் ஆண்டுகளாக நாடற்று பல நாடுகளில் உங்களை தக்க வைத்துகொண்ட வரலாறுகளை மறந்துவிட்டீர்களா? இரண்டாம் உலகப் போரின் முடிவு நேசப்படைகளுக்கு சாதகமாக அமையாமல் போயிருந்தால் யூதர்களின் இருப்பு இந்த பூமியில் என்னவாக இருந்திருக்கும்? இந்த வரலாற்றுக் கேள்வி எவ்வளவு பயங்கரமானது (உங்களுக்கு விடுதலை தர வந்த யூதர்களின் அரசன் என்று தன்னை சொல்லிக்கொண்ட இயேசுவால் முடியாததை) 1947ல் யூத மக்களுக்கு சொந்தமாக ஒரு நாடு வே

மருத்துவர் தாமஸ் சி. ஜெர்டன் என்கிற தாமஸ் கேவரிஹில்

அக்டோபர் – 12 – 1811 - இந்தியப் பறவையியல் பிதாமகன், விலங்கியளாளர், தாவரவியளாளர், மருத்துவர் தாமஸ் சி. ஜெர்டன் என்கிற தாமஸ் கேவரிஹில் ஜெர்டான் பிறந்ததினம்.* இந்தியப் பறவையியலின் முன்னோடிகளில் ஒருவரும் டி.சி. ஜெர்டான் என்று அழைக்கப்படுபவருமான தாமஸ் கேவர்ஹில் ஜெர்டான் இங்கிலாந்தின் டெர்ஹாம் கவுண்டியில் 1811-ல் அக்டோபர் 12 அன்று பிறந்தார். மருத்துவம் பயின்ற அவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் அறுவைசிகிச்சை மருத்துவராக (துணை சர்ஜன்) இந்தியாவுக்கு 1836-ல் வந்தார். சிறு வயதிலிருந்தே பறவைகள் மீதும் தாவரங்கள் மீதும் ஆர்வம் மிகுந்தவர் ஜெர்டான். இந்தியாவுக்கு வந்த பிறகு பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களை (specimen) சேகரிக்க ஆரம்பித்தார். தக்காணப் பீடபூமி பகுதியிலும் கிழக்கு மலைத் தொடரிலும் அவர் பணிபுரிந்தார். ஃபுளோரா என்பவரைத் திருமணம் செய்துகொண்டு நெல்லூர் பகுதியிலும் பின்னர் தலைச்சேரியிலும் பணியாற்றினார். இவை இரண்டுமே அன்றைய மதராஸ் மாகாணத்தின் பகுதிகளாக இருந்தவை. *ஏன் இந்த மாற்றம்?* பறவைகள், தாவரங்கள் மட்டுமன்றிப் பூச்சிகள், ஊர்வன, நீர்நில வாழ்விகள், பாலூட்டிகள் ஆகியவற்றிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு

இன்றைய இஸ்ரேல் உருவானது எப்படி?

தோழர் ஆனந்தன் Anandan Ganesan பதிவு இன்றைய இஸ்ரேல் உருவானதில் மிக முக்கி யப் பங்கு வகிப்பது, ‘பெல்பேர் பிரகடனம்’. பிரிட்டன் அரசு எவ்வாறு பாலஸ்தீன அரேபியர் களுக்கு துரோகம் இழைத்தது என்பதை அறிந்து கொள்ள பெல்பேர் பற்றி அறிந்து கொள்ளவேண்டும். 2017ல் அந்த பிரகடனத்தின் நூற்றாண்டு விழாவை பிரிட்டன் அரசு லண்டனில் கொண்டாடியது. உலகம் முழுவதுமுள்ள அரேபியர்கள் அந்த நாளை தங்களின் உரிமையை, அடிப்படை வாழும் உரிமையையே பறித்த நாளாய்ப் பார்க்கிறார்கள்.  முதல் உலகப் போர்(1914-18) முதல் உலக யுத்தத்தில் பிரிட்டன் தலைமையில் நேச நாடுகளும், துருக்கியின் ஆட்டோமான் காலிஃபட், ஜெர்மனி ஆகிய அச்சு மைய அதிகார நாடுகள் எதிர் அணியிலுமிருந்து சண்டையிட்டன. 4 ஆண்டுகள் நடைபெற்ற யுத்தத்தில் 85 லட்சம் வீரர்கள் இரண்டு பக்கமும் மடிந்தனர். 70 லட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சண்டை ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் நடைபெற்றது. யூதர்களைக் கவர... 1914ல் யுத்தம் தொடங்கப்பட்ட போது, தங்களுக்கு வலு சேர்க்க, யூதர்களின் ஆதரவு தேவை என பிரிட்ட னின் ‘யுத்த அமைச்சரவை’(வார் கேபினட்) முடிவு செய்தது. காரணம் அவர்களிடமிருந்த செல்

திருச்சியில் 4 கோடி ரூபாய் கடத்தல் தங்கம் காருடன் பறிமுதல். நபர்கள் கைது.

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டிகள், திருச்சி வழியாக சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி சமயபுரம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு காரில் 3 சூட்கேஸ்களில் சுமார் 7.5 கிலோ அளவுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது. அந்த தங்க கட்டிகளையும், அவர்கள் வந்த காரையும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்த முகமது இர்பான், அஜ்மல் கான் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். தங்கக் கட்டிகளை சென்னையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அந்த நகை வியாபாரி யார் என்பது குறித்தும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கக் கட்டிகள் எப்படி கொண்டு வரப்படுகிறது, இதற்கு யார் உதவுகிறார்கள் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

fight

கன்னியாகுமரியில் ஈத்தாமொழி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு இடையே மோதல்.  4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி! கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!