Skip to main content

Posts

Showing posts from November 22, 2015

அம்மணமாய்

இரவு பொழுதில் கொம்பும், வாலும் முளைத்துவிடுகிறது, வலது மார்பு மட்டும் வீங்கிநிர்க்கிறது, இடதுகண்ணில் வடியும் ரத்தம் ஆணுறுப்பில் சொட்டுகிறது , எதிரியை முட்டி தள்ளியவாறே நகர்வு ஓடுகிறது காலில் மலைகளை கட்டி இழுத்தும், முன்னின்ற பகலில் கூனி நிற்கிறது புட்டம் தெரிய சமுதாய சாட்டைகள். இரவி ல் சுயம் அம்மணமாய் ..............
எல்லா கவிதைகளும் தொலைந்து விட்டது நான் நடைமுறை சமூக விலங்கு ?

ஒரு கவிதையின் கனம்

ஒரு கவிதையின் கனம் தாங்க முடியவில்லை அதன் சூடு வலுக்கிறது ஒரு வெறியில் ஓலமிடுகிறது அந்த கவிதை அதை கொல்ல சொல்கிறது பின் நவீனத்துவமும் ஏகாதி பத்தியமும் அதன் முதுகு தண்டில் ....... கருத்தும் எதிர் கருத்தும் அதன் புட்டத்தில் என் விலாவை கவ்வி இழுக்கிறது அதன் இதயத்தில் விசாலமான ஓட்டை ஒழுகும் ரத்தம் என் இடது கண்ணில் நுழைந்து விட்டது காமமும் சுயமும் குடும்பமும் பொருளும் வலது காலை புதைத்துவிட்டது என் இடது கைக்கு மலம் மட்டுமே அதிக பரிட்சயம் வலது வர மறுக்கிறது

சுயமும் உரிமையும்

சுயமும் உரிமையும் தினமும் வலி இன்றி உதிர்கிறது -மயிர் போல கோபம் குடும்பத்தின் பின்னும் மானம் உயிரின் பின்னும் ஒழிந்துள்ளது பணம் படுக்கை அறை வரை பேசுகிறது மனைவியின் மாத குருதி உதிரிவில் கூட.... அவளின் தொடைக்கிடையில் முகம் புதைத்து எழுகையில் முற்றும் விழுந்து விடுகிறது மாயை பிடரி மயிரில் தொங்க.... ஆ... கதுவத்ர்க்குள் சுயம் விழிக்கிறது பின் உதிக்கிறது