Skip to main content

Posts

Showing posts from 2010

ஹார்மோனுடன் கண்ணீர்

தங்குதடையின்றி வரும் வார்த்தைகள் ஏனோ தயங்குகிறது ! அழுதுகொண்டே அவை ஊனப்பட்டது போல் வழுக்கி விழுகிறது . அட்றேனோ கோர்டி கொட்ரோபிக் ஹார்மோனுடன் கண்ணீர் சொட்டுகிறது நீ முகம் திருப்பி கொள்ளும்போது. _உணவைவிட உன் பார்வைகளாலே எனது செல்கள் உயிரோட்டம் பெற பழகிக் கொண்டதால்                                                            _______.......... f elixpavi lion 

சரியும் தவறும் நானே

நீ சமுதாயத்தில் என்ன எதிர்பார்க்கிறாயோ ,சமுதாயம் உன்னுடன் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென  நினைக்கிறாயோ உனக்கு எது மகிழ்வு என நினைக்கிறாயோ எதை உண்ண வேண்டும் ,எப்படி வாழவேண்டும் ,பணமா  புகழா, வாழ்வது குடிசையிலா மாளிகையிலா என்பதை நீ எப்படி உனக்கு எடுக்கிறாயோ அதையே மற்றவருக்கும் செய்வதே  சரி.          உனக்கு எது துக்கம் தருகிறதோ அதை மற்றவருக்கு செய்வது  நீ எதன் மீது எந்த பொருளின்மீது ஆசைப்படுகிறாயோ அதை மற்றவருக்கு செய்யாமலிருப்பதே  தவறு.

கடைசிபக்கம்

பக்கங்கள் முடிவுற்றன _வேகமாய்  என் எண்ணங்களோ இன்னும் சிறகு அடித்தன , வாழ்வின் இறுதிபகுதி என் நினைவுக்கு எட்டியது பக்கங்கள் முடிவுற்றன புதிய வெள்ளைக் காகிதங்கள் என் கைக்கு எட்டியது , அங்கு ஒன்றும் எழுதப்பட வில்லை அக்கால பகுதியில் என் காலடிகளைப் பதிக்கலானேன் நானே என் வாழ்வை வடித்தேன் , அங்கு ஒன்றும் எழுதப்படவில்லை ,

தவிப்பு

ஒவ்வொரு வருடபிறப்பும் லட்சியத்துடன் பிறக்கிறது முந்திய வருடத்தின் களைகளை கருக்கிவிட எண்ணுகிறது எல்லா நினைவுகளும் அழிந்து அணைந்து விடினும் சனியம் புடிச்ச சிகரட் மட்டும் ,புகைந்து கொண்டே இருக்கிறது

நண்பன்

ஒவ்வொரு வருடபிறப்பும் லட்சியத்துடன் பிறக்கிறது முந்திய வருடத்தின் களைகளை கருக்கிவிட எண்ணுகிறது எல்லா நினைவுகளும் அழிந்து அணைந்து விடினும் சனியம் புடிச்ச சிகரட் மட்டும் ,புகைந்து கொண்டே இருக்கிறது

கணவனுக்கு என் கனவுகளில் ஓன்று

வேலையின் நிமித்தம் ஓடி ஓடி களைத்துப் போய் கண்ணயர்ந்து திண்ணையில் சாய்கையில் அந்த மென்மையான இருளுக்குள் வண்ணமயமான புன்னகையுடன் ஓடிவந்து நிற்கிறாய் ! எத்தனை சுமைகளை நான் தூக்கி சுமந்தாலும் எனக்கு ஆறுதல் உன் மார்புமட்டும் தான் அந்தச் சூட்டின் கதகதப்பு எந்தத் தீயையும் ,பனியையும் திசை திருப்பிவிடுகிறது நீ உள் இழுத்து விடும் மூச்சில் வீங்கி சுருங்கும் நுரையீரலின் அசைவில் ,குழந்தையாய் நான் இருந்த பொழுது என்தாய் வாசனைச் சுமந்த சேலையின் தொட்டிலில் தொங்குவது போல் உள்ளது ! வார்த்தைகளில்லாத இதய இசையரங்கம் தாலட்டு பாடுகிறது ! இது எல்லாம் உனக்கு ஒரு வேளை சுமையாகுமோ என எண்ணியே தனித்தே சோர்ந்திருந்து நினைவுடனே துங்கிவிடுகிறேன்.................. பாசமுடன் அன்பு மனைவி

ஆம்பளலேடி ?!

எல்லோரும் செய்வதையே செய்து களித்தனர் என் பெற்றோர். எல்லோரும் போலவே மாசமானாள் என் தாய் எல்லா ஆண் பிள்ளை போலவே பிறந்து தொலைந்தேன் , சிரித்தேன் ,உண்டேன் ஆடினேன் காமமுற்றேன் ! ஆணாய் அழகாய் ! ஆனால் ஆணையே அழகென்றேன் எங்கிருந்தோ வந்தது வெட்கம் ! தெரியாமலே சீண்டுகிறது கூச்சம் ! உலகம் ஆண் என்கிறது உள்ளம் பெண் என்கிறது மதம் சாபம் என்கிறது ஆணாய் இருக்க விருப்பப்படுகிறேன் _அப்பொழுதே பெண்ணாய் இருப்பதை உணர்கிறேன் மாநகர வீதியிலே மனம் நோக சித்தரிப்பார் மனமில்லா சில மனிதரோ தனியே வா என வந்தழைப்பர் கல்வியை இடைமறித்து கலங்கடிப்பார் வேலை தரமறுத்து உள்ளம் வெந்து போக _தீவைப்பர் தற்கொலை செய்து கொள்ள தைரியம் கொடுக்க வில்லை தன் மானத்துடன் வாழ பால் உறவையும் கொடுக்கவில்லை அணைத்திடவாவது ஓர் உயிரைக் கொடுத்தாயா ? தாயே தள்ளி நிற்க ! யாரிடம் தயவு கேட்டபது ? கடவுள் மன்னிப்பவரா ? தண்டிப்பவரா ? கேட்காமல் கொடுப்பது தானம் கேட்டு கொடுப்பது பிச்சை இரண்டிலும் பிச்சை ஒட்டி இருக்கிறது இச் சொல் விடுபட இரண்டுபேரும் திருந்த வேண்டும் அப்படியானால் உங்கள் கடவுள் ......!?

என்ன நடந்து விட்டது நமக்குள்

காய்ந்த இதயத்தை கண்ணீரால் நனைத்தவன் நீ சுருங்கிக்கிடந்த வயிற்றை சுருக்கெடுத்தவன் நீ தோழமை என்ற பெயரில் _வந்த தாயுமானவன் நீ புரிய முடியாத சோகவாழ்வில் பருவமழையாய் வந்து போனாய் நீ தீமையே செய்தாலும் நன்மையாய் தெறிவதென்ன ? நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் எனும் பொழுதில் நீ எனக்கு ஏதாவது செய்துவிடுகிறாய் ! தாய்மை அறிவேன் காதல் அறிவேன் நட்பை மட்டும் உணர்ந்தேன் என்ன எதிர்பார்த்தாய் என்னிடம் 56kgசதை எலும்பை தவிற ஒன்றுமில்லையே ! தூரமிருந்தே என் துக்கத்தை துரத்துவது என்ன மாயம் மொழியின் இலக்கணம் தெரியாதவனே நட்பின் இலக்கணம் நடைபோடுவதென்ன கல்வி எதற்கு அறிவினை திறந்து மனதினை புதைக்கவா ! மனிதனை இவ்வுலகில் சந்தித்தேன் என்ற பெருமை என்றுமே எனக்குண்டு கலவை இல்லாத நட்பு என்மீது ஏன் ? தாய்மைக்கு ஈடான உன் நட்பு ஆம் இரண்டாவது முறையாக நான் உன்னில் கருவுற்றேன் கர்ணனை பார்த்ததில்லை -நீ இல்லை என்று சொல்ல _என் செவிப்பறைகள் கேட்டதுமில்லை ! எங்கிருந்தோ வந்த நான் இங்கேயே இருக்கும் நீ இங்கேயே இருக்க எங்கோ அங்கே நான் போக நீ ஏன் மறுக்க வேண்டும் நான் ஏன் தயங்க வேண்ட

தகாத உறவு !

யார் பத்தினி ? யார் உத்தமன் ? அழுக்கென்பது எது ? யார் அழுக்கு? அழுக்கில்லாதது எது ? அழுக்கின் உறைவிடம் எது ? சுத்த மென்பதே அழுக்கின் பிம்பம் தானே ! அழுக்கைப் பற்றிய சுத்தமான சிந்தை இல்லையேல்  சுத்தமாய் இருப்பது எப்படி ? அழுக்கை பற்றிய அறிவு இல்லையேல்  எது சுத்தம் என்பதில் நிலை இல்லாமல் போகும் ! கள்ளக் காதலை நினைக்காத பொது கணவனை மறந்து விடுவர் ! தகாத உறவினை மறந்து விட்டால்  உண்மைக் காதல் மறைந்து விடும் ! அடுத்தவரின் பால் உள்ள ஈர்ப்பினை  நினைத்துக் கொண்டிருக்காவிட்டால்  எப்படி (கணவனுக்கு ) ,மனைவிக்கு உண்மையாக முடியும் ? சிந்தையில் பிழை இருந்தால் தான்  செயலில் உண்மை விளங்கும் ! அப்படியானால் யார் சிறந்தவர் ?                                                                                                                  ______.........பெலிக்ஸ் 

எப்போது நல்லவன் ?

பெண்கள் பக்கத்தில் இல்லாத போது தூய்மை யானவன் ஆபாச சித்திரங்கள் காட்சிக்கில்லாத போது அருமையானவன் ஞாலம் எல்லாம் மறைந்து விடின் நானே கடவுள் ! ஆண்டவன் பாத்திரமோ அனைத்துமிருக்க அடக்கிக் கொள்ளவே கிடைக்கும் . பிழை, செய்யும் செயலின் விளைவு தான் , நியாயமும் தான் . தெரிய முடியாத அறியாமை நம்பிக்கை யாகும் புரியும் அறியாமையோ அறிவாகும் கிடைத்து விட்ட அறிவால் எது இருந்தும் எச்சாயத்துடனும் ஒத்து போகும்.                                                                                                                                                   _______.........பெலிக்ஸ் 

காய்ந்த எச்சிப் பருக்கை

ஊர்ந்து வரும் சூரியப்போழுதில் சுளிரென உரைக்கிறது பசி பச்சையலையில் காய்ந்த எச்சிப் பருக்கையினை தொட்டுத்தூக்க முனைகையில் முறிந்துவிடுகிறது நாய்க்கும் இவனுக்குமான உறவு . இரண்டு அனாதைகள்                                                                                                                 ______...........பெலிக்ஸ் 

திருத்த முடியாத பிழை

                                                                                                                              படிக்க  முடியாத  காவியம் திருத்த முடியாத பிழை   அழிக்க முடியாத அசிங்க ஓவியம்   ஆறாத காயம் மறக்க முடியாத நிகழ்வு   மன்னிக்க முடியாத துரோகம்   முடிவுவரை முடியாத வலி   சிரிக்கும்  போ து கூட வராத கண்ணீர்   மறித்தும் போகாத நினைவு   இத்தனையும் மூன்று சொல்லில்   " காதல் " என !!!!!!!!____! ! !!                                                                                                                       _______..........பெலிக்ஸ் 

சுய இன்பம்

சூழ்நிலையின் சூழ்ச்சிக்குள்ளும்   சதையின் பிடிக்குள்ளும்   ஏகமாய் கட்டுண்டுள்ளேன்   நான் மீள்வதும் ,வீழாமளிருப்பதும் முடிந்த ஒன்றெனில்   எதிர்காலம் எதற்கு ? எல்லாம் அவன் மூலமாய்   நடக்க வேண்டுமெனில்   சுயசிந்தை எதற்கு ? விதி உண்டெனில்   மதி எதற்கு ? அனைத்தையும் அவனே செய்து   முடித்துவிட   நான் எதற்கு ? நேரமே இல்லாதவனுக்கு   பொழுது போக வில்லை என்றால் ? யாரைக் கேட்பது ! சுய இன்பம் காண விருப்பப் பட்டவனின்   சூழ்ச்சியால்   அண்டத்தில் நானும் ஒரு பிண்டம் ! யாவையும் எதோ ஒன்று செய்துவிட   எனக்குள் உயிரோட்டம் எதற்கு ?_ அப்படியானால்   நான் என்னதான் செய்கிறேன்                                                                                      ______..........பெலிக்ஸ் 

மனைவி சில நே"ரம்"

மது சுகம் தருகிறது , மனைவியும் சில நே ரம்   மது போல கசப்பாய் இனிப்பாள் போதை தொற்றிக் கொண்டபின்   மூர்க்கம் குறைந்து   பாசம் முத்தி காமமாய் துடிக்கிறது   இரவின் போதை மாய்ந்து பகலில் சிறு மூர்க்கம் தொற்றிவிடுகிற!

மனைவி சில நே"ரம்"

மது சுகம் தருகிறது , மனைவியும் சில நே ரம்   மது போல கசப்பாய் இனிப்பாள் போதை தொற்றிக் கொண்டபின்   மூர்க்கம் குறைந்து   பாசம் முத்தி காமமாய் துடிக்கிறது   இரவின் போதை மாய்ந்து பகலில் சிறு மூர்க்கம் தொற்றிவிடுகிற!

குருதி

காயங்களில் இருந்து வடியும் குருதி கொண்டு வாழ்வில் ஓவியம் தீட்டப் பழகிக்கொண்டேன் .                                                                                                                                                                                                              ________.........பெலிக்ஸ் 

குடி

புகையாலும் மதுவின் மழையாலும் எங்கள் தோட்டத்தில் பருத்திக்காய் பல  வெடித்திருக்கிறது- விதவை                                                                                                            ________.........பெலிக்ஸ் 

இன்னொரு பூமி

முடியாததின்   முனங்கள் சத்தம்   ஆசையின் ஒத்திகை   கனவு ! ! ! !.                                                ________.........பெலிக்ஸ் 

சிலேடை

என்ன இரக்கம் புரிந்தாலும் மாறாது என்ன வழிபட்டும் அன்புகொள் ளாதும் சாவுதான் தண்டனை என்றுக் கொடுக்கும் கடவுளும் காதலியு மாம்.                                                                                                                      ________.........பெலிக்ஸ்