Skip to main content

Posts

Showing posts from 2016

உணர்ச்சி உணர்வுபூர்வமான அரசியல்

ஒரு கூட்ட மக்களை அன்றே திசைத் திருப்புவது , வயப்படுத்துவதாவது அன்றைய சூழலியல் நடைமுறை எதார்த்த மக்கள் கூட்ட எண்ண முடிவினை தேர்ந்தெடுப்பதில் நிலைகொண்டுள்ளது , எனினும் எதிர்கால கருத்தியலுடன் முரன்படும் நிகழ்கால எதார்த்த நடவடிக்கை நடைமுறை இன்றைய செயல்களின் எதிர் மனநிலையாகவே கடந்து போவதாய் தோன்றும் , மக்கள் கூட்டத்தின் மனநிலையும் சற்றே இருப்பிலேயே தேங்க நேரிடும் எதிர்கால திட்டத்தை வரை கோடுகளை அதின் மைய பிரச்சனைகளை தொடர்ந்து கையில் எடுப்பதின் மூலமே நிகழ்கால கருத்தியலின் சிதைவின் ஒரு பகுதியாவது நம் எதிர்கால கட்டமைப்புக்குள் நகரும். புரிதலுக்கு முன்னும் பின்னுமான நம் செயல்பாடுகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய செயல்படுகளின் மாற்றம் தேவையாகிறது ஒரு கூட்ட மக்களை புரிதலுக்கு உட்படுத்துவது நிலைகொண்டுள்ள கருத்தியலின் மறைமுரனை வெளிக்கொணர்வதும் உணர்ச்சி உணர்வுபூர்வமான அரசியல் தலையிட்டினை தகர்ப்பதிலும், மைய்ப்பட்ட மன நிலையில் இந்திய பரப்பை கருத்தியலின் தாக்கத்துக்கு கொணர பிரிவினையின் சிதைவு அவசியமாகிறது எனவே முதல் தேவை மனித உள் முரன்களை களையும் மைய எண்ண ஓட்ட செயல்பாடே .

தொடர்பு எல்லைக்கு வெளியே

அவ்வப்போது புகை மூட்டங்களும்  நாய் நரிகளின் ஊளையும் காதை கிளித்து தள்ளுகிறது  உன்  பார்வை விழும் பொழுதுகள் சாய்ந்து போனதால்  நான் தொடர்பு எல்லைக்கு வெளியே

மனித சதை பலம் கொள்கிறது புணர

உலகத்தின் எல்லா கழிப்பறைகளுக்கும் தெறியும் புணர்சியின் அத்துமீறல்  அவசராமாக அவிழ்கப்படும் உள்ளாடைக்கு தெறியும்  உறுப்பின் தவிப்பு  வேகமாக சாத்தப்படும் கதவுகள் சொல்லும் மாமிச உடலின் படபடப்பை  தெறிந்தோ தெறியாமலோ பிறப்பில் ஆடையேற்றம் நிகழ்த்தப்பட்டது, மரணம் வரை நீள்கிறது ஓரச்சிந்தனையாய் இந்த ஆடைஅவிழ்ப்பு, அன்பு அழகு அறிவு ஒழுக்கமென கூட்டாஞ்சோராய் அசிங்கப்பட்டு போனதோ காமம் காமமாய் இல்லாமல் என் ஆடைக்குள் மறைந்து கிடக்கிறதோ. காமத்தை இருளிள் அடைத்த சமூக வறலாற்று பெருமை யாருக்கோ, வெளிச்சத்தில் வெட்டவெளியில் நிர்வாணம் தொலைந்து போகிறதோ மீதம் வைக்காத ஏப்பத்தின் பெருமித ஒலியில் தலைகாட்டு கிறது பூட்ப்படாத காமம் ஏதோ இரவே படுக்க கண்டுபிடித்ததுபோல், பகலும் பாய்போடத்தான் வெளியும் புணரத்தான் ஒழுக்கம் சீந்தி போடப்பட்ட மனித சதை பலம் கொள்கிறது புணர

அனுக் கரு பிளவில்

அனுக் கரு பிளவில்  ஒரு சின்னஞ் சிறு ஒளிகீற்றின் பிறப்பு  எதற்கு என, ஏணி வைத்து காதை குடைகிறது எதற்கு  வலியுடன் பின்னிரவு உறுப்பின் மாபெரும் பிளவில் ரத்தமும் ஜலமுமாய் கிடந்தாய்  தென்கரையில் மூத்தவனும் வலக்கரையில் இளையவனும் கத்தி அழுது சிரிக்கையில் ஐந்து வருட இரவும் விளித்தே கடந்தது  இரண்டு முளை க்காம்புகளும் பால் கொடுத்தே வற்றி வலுவிழந்தது அவன் மூத்திரமும் மலமும் இல்லாத வாசனைகளை ஆடைக்குள்ளே தங்க வைத்தது உனக்கு பயந்தே கொண்ட உடலுறவின் பதபதப்பு தனியபோவதே இல்லை உன் பிறிவு மூன்று மரங்களை வாய்க்குள் ஊனியது போல. ஓங்கி காற்றடிக்கும் சமயம் உன் கண்சுருக்கம் உயிரை அழுத்தி பிழிகிறது பகல் முழுதையும் குடித்து விடும் அந்த பரிதவிப்பு அத்தனை ஏக்கமும் பொத்தி நோக்கும் அரவணைப்பும் எதற்காக தீ குச்சிதலை யில் தெறிக்கும் தீப்பொறிக்கு சாம்பலாய் உதிரும் வாழ்வில் எதற்காக?

நான் ஒரு உயிர்

எவன் வரைந்த கோடும் எனக்கு தடையில்லை  நான் ஒரு உயிர்  நான் ஒரு பிரபஞ்சம்  எனக்கென ஒரு தலை எனக்கென இரு முளை எனக்கென ஒரு குடல் எனக்கென ஒரு யோனி எனக்கென இரு கால் எனக்கென ஒரு சுவை எனக்கென ஒரு மணம் எனக்கென பல சிந்தை எனக்கென ஒரு வாழ்வு எனக்கெனஒரு அந்தரங்கம் எனக்கென ஒரு பசி எனக்கென ஒரு தாகம் எனக்கென ஒரு சுயம் நானும் வந்து விட்டு போகும் ஒரு நிகழ்வுதான் பெண்ணென்ற வெற்று வார்த்தையில் நானில்லை

அடுத்தநாள் இரவு இன்னுமொன்றும் வருவதாக தகவல்?

முகம் பல இணக்கங்களையும் முரண்களையும் பூசிதிரிகிறது அவளுக்கு முகமில்லை எந்த சுவற்றில்தேய்த்து உதிர்ந்து போனதோ  முகம் மனித கூறுகளுக்கு முழுமையானதுதான்  தந்தையின் தலைகுனிவும்  தாயின் அழுகுரலும்  தங்கையின் எதிர்காலமும் முகத்தை எங்கெங்கோ ஒழித்துவைத்திருக்கிறது அவள் கைபையின் இடுக்கிலும் வீட்டு புறத்து மரக்கிலையிலும் கழிப்பறையின் பொந்திலும் துணிக்கடைபடிகட்டில் ஒருமுகமும் அழுதுகொண்டே இருக்கிறது ஆணின் நிழல் தொடும்போதெல்லாம் முதுகுபுறத்தை ஒரு முகம் கடிக்கிறது உள்ளாடைகளில் புதைந்து கிடகும் ஒருமுகம் சமூதாயவெக்கையில் வெந்தேபோனது பகலின் நீண்ட தழுவழுக்கு பின் இருளின் சின்ன தொடுதலில் பல முகங்கள் எழுகிறது தனிமையின் இருள்நிறைந்த பொழுதே சுயம் அங்கங்களை அளவெடுக்கிறது ! அவள் கால்தடத்தில் பத்து முகம் தெறிகிறது தலைகுனிந்த நடைக்கு காரணமதோ நேற்று காலை ஒன்றும் நாளை இரவு மற்றொன்றும் அடுத்தநாள் இரவு இன்னுமொன்றும் வருவதாக தகவல்?

மாயையும் தெளிவும்

தேய்ந்து கொண்டே போகிறது காலத்தின் கணம்,  எந்த முன்அறிவிப்புமின்றி எதைஎதையோ செய்து முடிக்கிறது ஓர் இரவும்பகலும் ,  காலத்தின் செவிப்பறையில் ஓராயிரம்முறை புலம்பியும் மௌனமாய் கடந்து போகிறது, ஒருதுளி புன்னகையில் மறைந்துகிடக்கும் எண்ணமுடியா வார்த்தைகளாய்  உடல்முழுதும் புதிர்களை பூசிதிறிகிறது, கடந்துபோக எத்தனிக்கிறேன் அது முடிவிலியில் வாய்பிளந்து எக்களிக்கிறது, முதுகுபின்னால் ஓடுதளமெங்கும் சிரிப்பும் அழுகையும், மாயையும் தெளிவும் .

ஒரு கவிதையின் முகம்

மனிதனாய் பிறந்த அத்துனைபேருக்கும் ஏதாவதுஒரு தருனத்தில் போழுது விடிகையில் அல்லது கரைந்து விழுகையில் ஒரு கவிதையின் முகம், கவிதையின் தடமாவது முன்னே விரிந்து சுருங்கி போய்இருக்கும், வெந்தரையில் இல்லாத முந்திரி தோப்பை கொண்டுவரும் மாயவித்தை, பார்க்காத காதலியை ஆடைக்குள் அமிழ்த்தி வைக்கும் திறமை என கவிதையின் முகம் அகன்டது. கவிதைகளுக்கெல்லாம் அழகும் அசிங்கமும் உண்டாயென்றால் வினாதான் முளைக்கிறது, சில கவிதைகள் மூக்கும் முழியுமாக பூவும் பொட்டும், புனைவும் டையும் சூவும் வைத்து அலங்கரிக்கப ்படும். இலக்கியங்களில் சந்தம் சாரியை தொடை தளை ஓசை என மொழியை உருட்டி திரட்டி முகசாயமெல்லாம் பூசி வைக்கப்பட்டிருக்கும், தேவையா தேவையில்லையா என்பதை விட, எந்தமாதிரியான சூல்நிலைமைகளில் எழுதப்படுகிறது என்பதே? எதற்கு? மொழி என்ன வேலையை செய்கிறது, அழகியல் எங்கெல்லாம் உட்கார்ந்துள்ளதோ அங்கெல்லாம் பிளவும் ஆனவமும் மேட்டிமையும் இருக்கதான் செய்யும் அழகு அபத்தமானது அதிகார நார்கக்காளியை தலையில் சுமந்து திரிவதுதான், நடை, பாவனை, காது, தொண்டை என மின்னிக்கொண்டுதான் இருக்கும் , இது அபத்தம் இதை உடைத்து எறிந்தது புதுக்கவிதைகள் தாம் ரிய

அலைவரிசை எட்டவாபோகிறது

இளம் பசுங்கன்றை விருந்துக்கு  வைத்தபோதுதான் தெறிந்தது  மூக்கு முதுகுதண்டு மடு வால்நுனி  என அத்துனையும் தெய்வம்,  நாளை கத்தபோகும் சூரியனுக்கெதிராய் கண்விளிக்கையில்,  அறுந்து தொங்கும் மனித தலையில்  ரத்தம் தவிற வேரொன்றும் இல்லை, மாற்று சாதி மனைவியின் கழுத்து நெறிப்பில் அவள் புட்டத்திலிருந்து விழும் மலம் தவிற வேரொன்றுமில்லை, மெகாஹெட்ஸில் ஒலித்த அழுகுரலும்,  அவரின் கனவும் பத்தடிதூரத்திலே கரைந்து போனதென்ன.? மாட்டுசானத்தில் தவமிருக்கும்  கடவுளுக்கு மனிதகுரலின்  அலைவரிசை எட்டவாபோகிறது

மனுஷியின் சதை

பதரி எழுந்து உலரிதீர்த்து வியர்த்து பெரும்மூச்சுடன் தூங்குகிறேன், நிர்வாணமாய் கனவில் சிறிய புன்னகையுடன் கேட்கிறாள் இந்த பூமி யாருடையது ? இரண்டுமுறை புரண்டு படுக்கையில் அம்மணமாய் உடல்முழுதும் ரோமங்கள் நிறைந்த மனுஷியின் சதை உதட்டைகௌவ்வி இழுத்தவாரே கேட்டாள், இந்த தேவையெல்லாம் எதற்க்காக? பயந்து வலப்பக்கம் திறும்புகையில் விரைப்பின் உச்சத்தில் நின்ற ஆணின் குறி மூக்கை தொட்டு நின்றது இடிபோல் கனத்த குரலில் அவன் இந்த ஜீவனெல்லாம் யாருடையது? பக்கத்து அறைக்கு ஊர்ந்து நகர்கையில் குறிஇனைவுமுடிந்த மயக்கத்தில் இரண்டுடல் முணங்குகிறது இந்த எண்ணம் யாருடையது? பாதியிலே போனகனவு வரும்போதெல்லாம் ஒவ்வொரு நிர்வாணஉடலையும் ஒவ்வொரு கேள்வியுடன் கூட்டிவருகிறது .

மனைவியின் யோனி

மனைவியின் யோனி இரண்டே வருடங்களில் சலித்து போகிறது அவளின் புட்டதின்மீதான ஆவல் பல நேரங்களில் எதிர்பார்பை கூட்டுகிறது, பதின் பருவத்தின் குறிதேடலில் சகதோழனின் புட்டம் இனக்கமாயிருந்து விடுகிறது வேலிகருவைகளும் வாய்கால் கரையோரமும் விந்துக்கள் காய்ந்து கிடக்கிறது, காலாச்சாரமும் பண்பாடும் சகோதரி தாயின் உடலோடு புதைந்து போகிறதே ஏதோஒரு உறவுபெண்ணின் அன்பான மார்பகஅணைப்பில் காமத்தின் ஓரம் தன்னை சிலாகித்து கொள்கிறது, பின் எங்கிருந்துதான் வருகிறதோ யோனிகளின் மீதான அதிகாரமும் புனிதமும்

சூனியமாவதே .......

பணம் இல்லாது ஏகாந்த தனிமை தோன்றுகிறது எண்ணத்தின் வாழ்வெல்லாம் மாய துளைகளுக்குள் பரிதவிக்கிறது தோன்றும் மறையும் ஒரு விந்தையான மாய வின்மீனின் உள்ளே புதைந்து போகிறது சிதைந்து போகும் காகித அனுக்களுக்கிடையே சிக்கி தவிக்கிறது மனிதமகுடம், அன்பின் தோற்ற பொழிவுகளையெல்லாம் அளந்தே கொடுக்கிறது வந்தபுண்ணகையையும் வாய்இடுக்கிலே கடித்து கொல்கிறது உலகில் தோன்றிய முதலுயிராய் தனிமை பட்டிருக்க இல்லாததற்கு யார்காரணம் என்பது மட்டும் பின்னே வருகிறது இருந்தும் இல்லாததாய் இருப்பது மனித விதியென்றால் தனிமையாய் சுயத்தில் நெளிந்து சூனியமாவதே .......

நடுநிலை யாலர்

எந்த கட்சியையும் எப்போதும் நடுநிலை யாலர்களாக இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது, நடுநிலையாலர்கள் அனைவரும் எந்த பக்கமும் சாய்ந்திராதவர்களாக யூகிக்கவும் முடியாது, நான் அந்த பொழுதில் விசயத்தில் என் தலையீடு என்னவாக இருந்ததை பொருத்தே கருதமுடியும், சந்தர்ப்பவாத நடுநிலையாலர்களை அடையாளம் காணுவது சிக்கலானதே, எல்லா விசயத்திலும் நடுநிலையோடு இருப்பதற்க்கு ஒருசமூக கட்டமைப்பு தேவை இல்லாத பட்சத்தில் நடுநிலையே அபத்தமாகிவிடும், ஒருநிகழ்வின் தன்மையை பொருத்தும், அது நிகழும் சமூக வடிவமைப்பை வைத்துமே முடிவெடுக்க முடியும், நடுநிலையும் மாற்றத்துக்கு உட்படும், எல்லா விசயத்திலுமல்ல, நடுநிலை என்பதும் ஒருகருத்தியலின் சார்புதான், வழுக்கட்டாயமான நடுநிலை மனிதனுக்குமட்டுமானதாக இருக்காது ஒட்டுமொத்த உயிரியலுக்கானதாகவே  தோன் றும், நடுநிலை என்பதே வேரொரு சூழ்நிலையில் பார்த்தால் பெரும் அபத்தம், சமரசம் செய்யுமான மனநிலையாகவே தோன்றும்.

அடையாளம்

மனிதனுக்கான அடையாளம் முக்கியமானதாகவும் அவனது சுய உரிமையின் பிரதானமாகவும் இன்று பல சாரி -களாளும் எடுத்து செல்லப்படுகிறது, இதில் தேசியவாதம், இனவாதம், மதவாதம், சாதியவாதம், மொழி என அதன் பரப்புவிரிகிறது உண்மையாகவே மனிதனுக்கான அடையாளம் ஒரு மாய எண்ணத்தின் விளைவுதான், அதன் தேவையை பொருத்துதான் மனிதனுக்கான உரிமையில் இடம் கொடுக்க முடியும், அடையாளம் நாம் தொடர்ந்து வாழும் தன்மையின் பரினாமத்தை பொருத்தது அது இயல்பிலே உயிரியலுக்கானது, அது தன்னை தன் இடத்திற்க்கு ஏற்ப்ப தகவமைத்துக்கொள்ளும், அடையாளம் என்பது என்னை பின்தொடர்ந்து வருவது அல்லது பொதிவியலானதாக ஒன்றுக்குள் சுருக்குவது அடையாளத்தின் தன்மை, இதை ஏற்றுக்கொள்ள முடியாது மாபெரும் அபத்தம், ஒருமனிதனின் முகவடிவமானால் இடத்தை சார்ந்து அவன் இறக்கும் வரைநீளும் அதுவும் அவன் சந்ததியை தொடர்ந்து விடமுடியாது, அடையாளம் ஒரு ஆதிக்கத்தின் வெளிப்பாடுதான்

ஒரு நூல்

சரியாக தூங்கி இரண்டுவருடங்கள் கடந்துபோயின  நேற்றய ஆழ்ந்த தூக்கத்தில்  மூன்று வெட்டுக்கிளிகள்  உன் சல்வாரின் ஒரு நூலை வலைத்து சுருக்கி எதையோ செய்ய முனைகிறது  மூன்று ஆண்டுகளுக்குமுன் பிறிந்த போது  அறுந்து போன பல நூறு நினைவுகளின் தொடர்பை சல்வாரின் ஒரு நூல் பலபடுத்துமெனில் ......................

ஒரேஒரு புன்னகை

பவித்ரமான உன் அழகியலில்  புடைத்திருக்கும் மார்பும்  வீங்கி நிற்க்கும் புட்டமும்  கண்ணிண் முதற்பார்வையில் படும்தான்,  எனினும் உன்னிடம் தேவையெல்லாம் ஒரேஒரு புன்னகை அதனோடுவரும் ஒரு எச்சில் துளி வாசம் சுமந்த காற்றின் இரண்டு அணு முகம் மரையும் தூரம் நெருங்கையில் எதார்த்தமாய் ஒரு பார்வை முழு வாழ்வின் புழம்பலுக்கு போதுமென நினைக்கிறேன்.

உலகையே அழிக்க பார்க்கிறேன்

பிறிவின் உபத்திரவத்தில் அழுது தீர்த்துவிடுகிறேன் உண்ணாமல் உரங்காமல் மௌனமாய் சமூகஎதிர்பை காட்டுகிறேன். சிரிக்காமல், இயங்காமல் மனிதக்கூரை வெறுக்கிறேன்  தற்கொலை செய்து நிகழ்வயே முடித்து வைக்கிறேன் எங்கும் வியாபித்திருக்கும் நினைவை ........? பூதமாய் உருவெடுத்து உலகையே அழிக்க பார்க்கிறேன்

நாடாளுமன்ற ஜனநாயம்

நாடாளுமன்ற ஜனநாயம் பரவலாக அனைத்து மக்ககளிடமும் வெறுப்பை சம்பாதிக்கிறது, இதன் உள்தோற்ற பிழையினை டாக்டர் அம்பேத்கரின் வழியில் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது, ஒரு சர்வாதிகார நாட்டில் நிலவும் நாடுமன்ற ஜனநாயக எதிர்மனநிலையினைவிட ஜனநாயகத்தின்மீது பற்றுதல் கொண்ட நாடுகளில் அதிகம் வெளிப்படும் காரணம் நாடுளுமன்ற ஜனநாயகம் பொருளாதார ஏற்றதாழ்வுகளில் கவனம் செலுத்த வில்லை மற்றும் அதனுடைய சித்தாந்த மெல்லாம் வலிமையுள்ளவன் வலிமையில்லாதவன் பிளைத்துக்கொள்ள அவர்அவர் வழிவகைகளை தேர்ந்தெடுக்க சொல்கிற து இப்படி இருக்கும் கட்டமைப்பில் ஏழை அல்லது வலிமை இல்லாது உள்ளவர்களின் நிலை மேலூம் வலுவிழந்தே போக நேரிடுகிறது, சமூகபொருளாதார ஜனநாயகம் இல்லாமல் அரசியல் ஜனநாயத்தில் வெற்றி பெறமுடியாது, இதற்க்கு ரஸ்யாவை காரணம் காட்டும் அம்பேத்கர் சமூக, பொருளாதார ஜனநாயகம் என்பது அரசியல் ஜனநாயகத்தின் நரம்பும் நாளமும் என்கிறார், ஆனால் சுதந்திரத்தை தூன்டிய இது சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்கும் இடையே சமநிலையை உருவாக்கவில்லை மாறாக விழைவு சுதந்திரம் சமத்துவத்தை விழுங்கி விட்டது, ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கியது, மேலும் அவர் குறிப்பிடுவது அமை

எவ்வளவு தூரம் கடந்து போயிருப்பாள்

எவ்வளவு தூரம் கடந்து போய்யிருப்பாய் அழுகையைவும் பரிதவிப்பையும் உதாசினப்படுத்திவிட்டு நீ எவ்வளவு தூரம்போய்யிருப்பாய் ? நிரம்பி சிந்தும் ஒளிக்கதிர்களுக்கிடையே ஒற்றை மாமரத்தடியில் உதிர்த்துவிட்டு போன உன் சிரிப்பை கடந்து எவ்வளவு தூரம் போயிருப்பாய் ? உதடுகள் அழுத்தி ஒத்தி எடுத்த வெப்பத்தை தவறவிட்டு எவ்வளவு தூரம் போயிருப்பாய் ? ஒரு கூடி பார்வை தொடுதலில் சிலாகித்த கண்களை கடந்து பரிமாறி கொண்ட பரிசை ஒழித்து வைத்து விட்டு நீ எவ்வளவு தூரம் போயிருப்பாய் ? உன் வாசம் தேடும் நாசிக்கும் குரல் தேடும் காதுக்கும் ஸ்பரிசம் தேடும் விரல்களுக்கும் என்ன எழுதி வைத்து விட்டு போனாயோ ?

இந்திய சூழலில் புரட்சிக்கான வெடிப்பின் நிலை ?

வர்க்கத்தின் தோற்றம் வேண்டுமானால் ஒரு புள்ளியிலிருந்து வந்திருக்கலாம் அதன் மனநிலையும் சில இடங்கலில் ஒற்றுமையாகலாம்  மற்றும் கவனிக்க தக்கது அதன் பரிணாமம் நிலத்துக்கு ஏற்ப ஒரு கூட்ட ஜனத்தின் தந்திர சூல்சியுடன் தன் வடிவத்தை மாற்றிக் கொண்டுள்ளது,  பிரிவினையின் பரிணாமங்களில் இந்திய பரப்பு விசித்திரமானது, அம்பேத்கரின் பார்வை இவ்வாறாக தெரிகிறது இந்திய பிரிவினை பொருலாதாரத்துக்கானது எனினும் அதன் சிக்கல் நுணுக்கம் சமூக வடிவமைப்பெல்லாம் மதத்தின் தலையீடே பிரதானமாய் உள்ளது, கட்டுப்பாடுகளும கோட்பாடுகளும் மற்ற நாடுகளில் இல்லாதைப் போல கடவுளுடன் இனைந்து சடங்காக கடைமையாக உருசெய்யப்பட்டுள்ளது,வர்க்கம் தீண்டாமை எனும் பெயரில் கானப்படுவதே ரத்தம் நாளம் ஜீன் உளவியள் கருத்தியல் தன்மானம் வீரம் பெண் கொளரவம் என நீள்கிறது சாதியின் முகம், பெண் சதை மீதான மய்யப்பட்ட கலாச்சாரம்  கலந்து கிடக்கும் சமூகத்தில்,உறவு இனம் என திருமன சடங்காச்சாரமும் பெண்ணை மையப்படுத்தியே பிரிவினையின் சூல்ச்சி கருகொண்டுள்ளது, இந்திய மண்ணின் வினோதம்தான், மூட நம்பிக்கையில் சாதியமும் ஒன்றாக்க இந்துத்துவ சீர்திருத்த வாதிகள் செய்தார்களா எனில் இல்

எழுத்து

என் எழுத்து எனக்கான தேடுதல் அதில் சரி தவறு என்பதெல்லாம் என் இயழ்பு. எழுத்து விரிவதும் சுருங்கி கிடப்பதும் காலத்தின் பாத அழுத்ததை பொறுத்து என் கற்பணைகள் எந்த பொழுதுக்கும் இசையும் என்பதில் இல்லை வெட்டவெளியில் உருண்டோடும் போது நினைப்பதை எல்லாம் ஊதித்தள்ளுகிறேன் சில காற்றில் கணமேற்றும் சில என்னிடமே திரும்பும்

இருப்பு

கேள்வி எங்கிருந்து வருகிறதோ அங்கே பதில் கேள்வி நான் இருக்குமென்பது வாதமென்றால் எனக்கில்லை இல்லை என்றால் எனக்கு இருக்கும். இல்லாததிலிருந்து வந்த இருப்பிலே இருந்து இருப்பதையும், இருந்து இல்லாததையும் வாதிப்பேன், இருக்குமென்பேன் இல்லை என்பேன் முடிவு இல்லாததாய் இருந்த ஒன்று என சொல்லி ஒன்றுமில்லை என்பேன் அதிலே ஒன்று இருக்கிறதென்பேன்  கேள்வி எங்கிருந்து வருகிறதோ அங்கே பதில் கேள்வி நான் இருப்பதில் ஒன்றுமில்லை என்பேன் ஆனால் இல்லாததில் ஒன்று இருக்கிறதென்பேன் தொடக்கமும் முடிவும் ஒன்றுதான் எங்கே  முடிகிறதோ அங்கே தொடங்குகிறது தூரமில்லை எதுவும் தூரமில்லை ஒரேயிடத்தில் தான் இருக்கிறது எதுவும் தூரமில்லை கேள்விக்கு பதிலுடன் கேள்வியாய்?

நாறும் சோறு

பிறந்ததிலிருந்து கண்கள் அழுதுகொண்டே இருக்கிறது நீரும் வற்றிய பாடில்லை பிறப்பின் கர்மமும் ஓய்ந்ததாய் இல்லை கழுத்து இருக்கப்பட்டு மரத்தின் நுனியில் தொங்கவிடப்பட்ட வாழ்க்கை நரம்புகள் கிழிந்து ரத்தம் கொட்டித் தீர்த்தும் அடங்கி விடாத அழுகை திரும்பிய பக்கமெல்லாம் கொட்டி கிடக்கும் சோகக்குழி திண்ணும் உணவெல்லாம் நாற்றமெடுக்கும் மலம் கணவு வரை நீளும் மலச்சுமை திராவிடம் தெருவில் வீசியது இடதுகையோ சூம்பி நிற்கிறது வலதோ வலுக் கட்டாயமய் உறுப்பை பிடித்து தொங்குகிறது மதம் அம்மணமாய் அழைகிறது கழுத்து குழியில் ஓர் அதிசயம் நிகழவேண்டும் வலிக்கும் போதாவது கத்ததெறிய

பன்னி

அரபு தேச வாசனையில் குளிக்க வேண்டும் கொள்ள புறத்து நாத்தம் கொமட்டுதுன்ன பய பேளாமலாஇருக்கான் இதவிட நாத்தம் உலகுல இல்லாமலா இருக்கு செத்தபெறவு வருமே ஒரு நாத்தம் அத தூக்கிட்டுதான திரியுரான் எனக்கும் மூக்குண்டு அதுல வாசனையுண்டு அரபு தேச வாசணையில் குளிக்க வேண்டும் எங்கவீட்டு பன்னிய சோப்புபோட்டு அலசவேண்டும் முத்த மிட்டு செல்லபெரிடனு கிளிஞ்ச சட்டைய கிளிக்காம தொவச்சு பிஞ்ச செருப்ப போடாம போட்டு அரபு தேச வாசணையோட அங்காடியெல்லாம் சுத்தனும்

கா

கடவுள்களெல்லாம் காதலில் பிணைந்து கிடக்க கோயில் சிலையெல்லாம் காமத்தில் வியர்த்து குளிக்க மானுட கலவி (காதல்) மட்டும் மண்டியிட்டு .... இந்திய கலாசாரத்தில் நளினம் காட்டும் சதை அடிவயிற்றை நக்கி போகும் மேற்கத்திய பெண்ணிண் நிழலில் வடிகிறது இனமும் மொழியும் சாதியும் மதமும் ஆணுறுப்பின் விரிவுக்கு அவசிமில்லைதான் ,..!

பசிக்கிறது

உலக நாடுகளே உங்கள் பொரருளாதார சண்டையையும் ஆசையையும் விட்டுவிடுங்கள் எனக்கு பசிக்கிறது . உங்கள் ஆடம்பர கட்டிடங்களையும் கார்களையும் நிறுத்துங்கள் அனுஆயுதங்களையும் ஆடைகளையும் புதையுங்கள் எனக்கு பசிக்கிறது. உங்கள் கடவுள்களைகொன்று விடுங்கள் கவிதைகளையும் கட்டுரைகளையும் அறிவியலையும் காலகடத்து கருவியையும் அனுதாபத்தையும் உடைத்தெறியுங்கள், எனக்கு பசிக்கிறது. உங்கள் அழகியலையும் ஆண்மையையும் ஒதுக்கி வையுங்கள் வீரத்தையும் வரலாறையும் எறித்து விடுங்கள் சடங்கையும் சம்பரதாயத்தையும் ஒழுக்கத்தையும் மிதித்து தள்ளுங்கள் எனக்கு பசிக்கிறது. உங்கள் அழுகையும் கருத்துரையும்வேண்டாம் உங்கள் இரக்மெல்லாம் எங்கள் தொடை இடுக்கு வரைதான் தயவுசெய்து வழிவிடுங்கள் எனக்கு பசிக்கிறது.

மாயை

ஒரு நிகழ்வு மாயையாய் தோன்றுகிறது பிறிதொரு நேரத்தில் இருப்பாய் தெறிகிறது பின் முரன்பட்டு போகிறது மாயையும் இருப்பும் ஒன்றுபட்டு நிகழ்வாய் மாறுகிறது முரனாகிறது .......