Skip to main content

Posts

Showing posts from May 8, 2016

உணர்ச்சி உணர்வுபூர்வமான அரசியல்

ஒரு கூட்ட மக்களை அன்றே திசைத் திருப்புவது , வயப்படுத்துவதாவது அன்றைய சூழலியல் நடைமுறை எதார்த்த மக்கள் கூட்ட எண்ண முடிவினை தேர்ந்தெடுப்பதில் நிலைகொண்டுள்ளது , எனினும் எதிர்கால கருத்தியலுடன் முரன்படும் நிகழ்கால எதார்த்த நடவடிக்கை நடைமுறை இன்றைய செயல்களின் எதிர் மனநிலையாகவே கடந்து போவதாய் தோன்றும் , மக்கள் கூட்டத்தின் மனநிலையும் சற்றே இருப்பிலேயே தேங்க நேரிடும் எதிர்கால திட்டத்தை வரை கோடுகளை அதின் மைய பிரச்சனைகளை தொடர்ந்து கையில் எடுப்பதின் மூலமே நிகழ்கால கருத்தியலின் சிதைவின் ஒரு பகுதியாவது நம் எதிர்கால கட்டமைப்புக்குள் நகரும். புரிதலுக்கு முன்னும் பின்னுமான நம் செயல்பாடுகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய செயல்படுகளின் மாற்றம் தேவையாகிறது ஒரு கூட்ட மக்களை புரிதலுக்கு உட்படுத்துவது நிலைகொண்டுள்ள கருத்தியலின் மறைமுரனை வெளிக்கொணர்வதும் உணர்ச்சி உணர்வுபூர்வமான அரசியல் தலையிட்டினை தகர்ப்பதிலும், மைய்ப்பட்ட மன நிலையில் இந்திய பரப்பை கருத்தியலின் தாக்கத்துக்கு கொணர பிரிவினையின் சிதைவு அவசியமாகிறது எனவே முதல் தேவை மனித உள் முரன்களை களையும் மைய எண்ண ஓட்ட செயல்பாடே .