Skip to main content

Posts

Showing posts from February 27, 2011

பெலிக்ஸ்_ஹார்மோன்

என்னை யாரும் குறை கூறியதில்லை காரணம் நான் யாரைப்பற்றியும் குறைவாய் பேசுவதில்லை  என் வெற்றி யாரையும் காயபடுத்துவதாய் இருந்தால் அது தோல்விதான் என் தோல்விகள் கூட யாரையும் காயபடுத்துவதாய் இருக்ககூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன் எதிரிகள் இருக்க விரும்பவில்லை ஆனால் அவர்களே எனது சிறந்த நண்பர்கள் பாவம் ,துரோகம் என்பவையெல்லாம் நம்பிக்கை இன்மையாலேயே வருகிறது நம்பிக்கை எனக்குஇல்லை காரணம் எதிர் பார்ப்புகள் எனக்கில்லை ஆதலால் எந்த குரோதமும் என்னுலில்லை. நான் உன்னைப்போன்றே இருக்கிறேன் காரணம் நீ என்னை பார்க்கும் பிம்பமே எனது வெளிப்பாடு ___________பெலிக்ஸ் ................

மாமிசத்தின் பசி

என் தேவைகள் எதை பொருத்து தீர்மானிக்கப்படுகிறது, என் மாமிசத்தின் பசியா? என் கொள்கைகள் யாரை பொருத்து உள்ளது நான் செய்ய துடிப்பதும் செய்யாமலிருக்க வாஞ்சிப்பதும் என்ன எவையின் வழிப்பாதை. ஏன் யாரையோ பொருத்து சிந்தித்து கொண்டிருக்கிறேன் எனக்கான அன்றய தேவையை எதற்காக பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையில் வாழவேண்டும் வரைமுறை உள்ளது சுதந்திரமா நான் மனிதனாய் வாழவேண்டுமெனில் குடும்பம் என்பது அல்லது சந்தோசத்தில் வரைமுறை என்பது இருக்ககூடாது. தவறு என்பது கொலை மட்டும்தான்.அதை மட்டும் செய்யாமலிருந்தாலே போதுமானது. மற்றயவை எல்லாம் பியித்து உடைத்திடவேண்டும்

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது