Skip to main content

Posts

Showing posts from December 13, 2015

ஒரத்த பாளயம் அணை

 விசமேறும் ஒரத்த பாளயம் அணை யார் பாதுகாப்பது ? மேற்க்கு தொடர்ச்சிமழையில் உற்ப்பத்தியாகி  பேரூர் கோயமுத்தூர் திருப்பூர் சென்னிமலை அஞ்சூர் வழியாக 174 கிலோமீட்டர் பயணம் செய்து காவிரியில் கலக்கும் நொய்யல் நதி  விவசாய பயன்பாட்டிற்க்காக ஒரத்த பாளயம் அணை 1984ல் ஊத்துக்குளி பக்கத்தில் ஒரத்தபாளயத்தில் 17 கோடி ரூபாய் செலவில் 2.290 கிலோமீட்டர் தொலைவிர்க்கு அணையானது 1992ல் கட்டப்பட்டது இதனால் நேரடியாக பாசனத்தை ஈரோடு மாவட்டத்தில் 500 ஏக்கருக்கும் அதேபோல கரூர் மாவட்டத்தில் அதிகமாக 9875 ஏக்கரும் பயன்பெரும் வகையில் கட்டப்பட்டுள்ளது  கட்டிய சில ஆண்டுகளுக்கு விவசாயிகள் கனவு கண்டதைப்போல ஓரளவு பயன்பட்டுக்கொண்டிருந்த அணை எந்த உயிரினமும் வாழ தகுதியற்ற விசமாக மாறிப்போனது திருப்பூரின் லாப வெறியே, விவசாயத்தையும் குடிநீரையயும் கொன்றுவிட்டது 1990 வாக்கில் 90ராக இருந்த சயப்பட்டரைகள் 2004ஆம் ஆண்டு 800க்கும் அதிகமானது இவைகலில் பெரும் பாலனவை அரசு நியமித்த சட்டங்களின் படி 3 கிலோமீட்டருக்கு அப்பால் கட்டப்படவில்லை,  இதை ஆளும் அரசுகளும் கண்டும் கண்டுகொள்ளாமல் இன்றும் இருக்கிண்றன, பல விதமான பயிர்களும் காய்களும

காதலால் கடவுளானேன்

காதலால் கடவுளானேன்     வாழ்கையில் பல நிகழ்வுகள் என்னை வேறு விதமான சிந்தனைக்குஇழுத்துச் சென்றிருக்கிறது.  ஒரு சில நினைவுகள் மட்டும் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.   ஆனால்    சூழ்நிலைகள் அனைத்தும் வாழ்க்கையின் எதார்த்தங்களை , தத்துவங்களை , முடிவுகளை கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறது. உன்னுடன் சூழ்நிலைகள் எனக்கு ஏற்படுத்திய தருணங்கள் யாவும் எந்த ஒரு மாற்றத்தையும் தரவில்லை. காலம் உருண்டேடியது யாவையும் சதையாகவும் மிருகமாகவும் ஒன்றுமிலாததுமாகவும் புலப்பட்ட எனக்கு உன்னை காணும் தருனைங்கள் இருப்பதாய் உலகில் அனைத்தும் உண்மையாய் இன்பமாய் யாவும் நமக்காய் . துன்பம் தோழனாய் தோன்றியது , ஆனால் உணர்விழந்து நின்றேன் , சிந்தனையோட்டம் சீராகயில்லை சிரிக்க தோன்றியது அழுகையும் இனிப்பாய்த் தோன்றியது , துக்கமில்லை ஏதோ ஒரு உணர்வினுக்குள் பீடிக்கப்பட்டேன் யோகா தியானம் கொடுக்காத உணர்வு அது .   என்னை அறியாமலே பார்க்கச்சென்றேன். அவள் பின்னாலே ஓடலானேன் . அவள் வீட்டை விட்டு வெளியே வரும் நேரங்கள் என்னை அறியாமலே எனக்கு புலப்பட்டது. உண்மைதான் இங்கு டெலிபதி கற்றுக்கொண்டேன்