Skip to main content

ஒரு கவிதையின் முகம்

மனிதனாய் பிறந்த அத்துனைபேருக்கும் ஏதாவதுஒரு தருனத்தில் போழுது விடிகையில் அல்லது கரைந்து விழுகையில் ஒரு கவிதையின் முகம், கவிதையின் தடமாவது முன்னே விரிந்து சுருங்கி போய்இருக்கும், வெந்தரையில் இல்லாத முந்திரி தோப்பை கொண்டுவரும் மாயவித்தை, பார்க்காத காதலியை ஆடைக்குள் அமிழ்த்தி வைக்கும் திறமை என கவிதையின் முகம் அகன்டது. கவிதைகளுக்கெல்லாம் அழகும் அசிங்கமும் உண்டாயென்றால் வினாதான் முளைக்கிறது, சில கவிதைகள் மூக்கும் முழியுமாக பூவும் பொட்டும், புனைவும் டையும் சூவும் வைத்து அலங்கரிக்கப்படும். இலக்கியங்களில் சந்தம் சாரியை தொடை தளை ஓசை என மொழியை உருட்டி திரட்டி முகசாயமெல்லாம் பூசி வைக்கப்பட்டிருக்கும், தேவையா தேவையில்லையா என்பதை விட, எந்தமாதிரியான சூல்நிலைமைகளில் எழுதப்படுகிறது என்பதே? எதற்கு? மொழி என்ன வேலையை செய்கிறது, அழகியல் எங்கெல்லாம் உட்கார்ந்துள்ளதோ அங்கெல்லாம் பிளவும் ஆனவமும் மேட்டிமையும் இருக்கதான் செய்யும் அழகு அபத்தமானது அதிகார நார்கக்காளியை தலையில் சுமந்து திரிவதுதான், நடை, பாவனை, காது, தொண்டை என மின்னிக்கொண்டுதான் இருக்கும் , இது அபத்தம் இதை உடைத்து எறிந்தது புதுக்கவிதைகள் தாம் ரியலிஸம், மேஜிக்ரியலிஸம், மினிமலிஸம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் என தன் வால் நீள்கிறது. எப்பொழுதும் மொழியும் அதனை சார்ந்த வடிவமும் மனிதனுக்கானது அவனது கீழ்தளத்தை நொறுக்க வெளிப்படுத்த உரியனவே எந்த அதிகார பகிர்வுக்கும் ஈட்படுத்துவது அபத்தம்தான்

Comments

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது