முகம் பல இணக்கங்களையும் முரண்களையும் பூசிதிரிகிறது
அவளுக்கு முகமில்லை எந்த சுவற்றில்தேய்த்து உதிர்ந்து போனதோ
முகம் மனித கூறுகளுக்கு முழுமையானதுதான்
தந்தையின் தலைகுனிவும்
தாயின் அழுகுரலும்
தங்கையின் எதிர்காலமும்
முகத்தை எங்கெங்கோ ஒழித்துவைத்திருக்கிறது
அவள் கைபையின் இடுக்கிலும்
வீட்டு புறத்து மரக்கிலையிலும்
கழிப்பறையின் பொந்திலும் துணிக்கடைபடிகட்டில் ஒருமுகமும் அழுதுகொண்டே இருக்கிறது
ஆணின் நிழல் தொடும்போதெல்லாம் முதுகுபுறத்தை ஒரு முகம் கடிக்கிறது
உள்ளாடைகளில் புதைந்து கிடகும் ஒருமுகம் சமூதாயவெக்கையில்
வெந்தேபோனது
பகலின் நீண்ட தழுவழுக்கு பின்
இருளின் சின்ன தொடுதலில் பல முகங்கள் எழுகிறது
தனிமையின் இருள்நிறைந்த பொழுதே சுயம் அங்கங்களை அளவெடுக்கிறது !
அவள் கால்தடத்தில் பத்து முகம் தெறிகிறது தலைகுனிந்த நடைக்கு காரணமதோ
நேற்று காலை ஒன்றும்
நாளை இரவு மற்றொன்றும்
அடுத்தநாள் இரவு இன்னுமொன்றும் வருவதாக தகவல்?

Comments
Post a Comment