Skip to main content

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான்
பேயுமல்ல
என் தனிமையில் கிச்ச மூட்டுவான்
தென்ற்றளுமல்ல
மிகச்சாதரணமானவன் தான்
ஆனால்
மகத்தான இழுப்பு விசை கொண்டவன்
அவன் தூர சைகையிலே
என் ஆடை கலந்து விழ துடிக்கும்
என் முளை நசுங்க அணைத்திட
ஆசைதான்
என்னவோ பயமுறுத்துகிறது
அவன் தொடுகையில்
நிலா பேசுகிறது
சூரியன் கத்துகிறது
நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது
ரத்தம் சூடேறி அவனை
நரபலி கேட்கிறது

Comments

  1. ஆழ்மனத்தின் போராட்டம்....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது