தேய்ந்து கொண்டே போகிறது காலத்தின் கணம்,
எந்த முன்அறிவிப்புமின்றி எதைஎதையோ செய்து முடிக்கிறது ஓர் இரவும்பகலும் ,
காலத்தின் செவிப்பறையில் ஓராயிரம்முறை புலம்பியும் மௌனமாய் கடந்து போகிறது,
ஒருதுளி புன்னகையில் மறைந்துகிடக்கும் எண்ணமுடியா வார்த்தைகளாய்
உடல்முழுதும் புதிர்களை பூசிதிறிகிறது,
கடந்துபோக எத்தனிக்கிறேன் அது முடிவிலியில் வாய்பிளந்து
எக்களிக்கிறது,
முதுகுபின்னால் ஓடுதளமெங்கும்
சிரிப்பும் அழுகையும்,
மாயையும் தெளிவும் .

Comments
Post a Comment