Skip to main content

மனுஷியின் சதை

பதரி எழுந்து உலரிதீர்த்து வியர்த்து பெரும்மூச்சுடன் தூங்குகிறேன்,
நிர்வாணமாய்
கனவில் சிறிய புன்னகையுடன் கேட்கிறாள்
இந்த பூமி யாருடையது ?
இரண்டுமுறை புரண்டு படுக்கையில்
அம்மணமாய் உடல்முழுதும்
ரோமங்கள் நிறைந்த
மனுஷியின் சதை
உதட்டைகௌவ்வி இழுத்தவாரே
கேட்டாள்,
இந்த தேவையெல்லாம் எதற்க்காக?
பயந்து வலப்பக்கம் திறும்புகையில் விரைப்பின் உச்சத்தில் நின்ற ஆணின் குறி
மூக்கை தொட்டு நின்றது
இடிபோல் கனத்த குரலில் அவன்
இந்த ஜீவனெல்லாம் யாருடையது?
பக்கத்து அறைக்கு ஊர்ந்து நகர்கையில்
குறிஇனைவுமுடிந்த மயக்கத்தில்
இரண்டுடல் முணங்குகிறது
இந்த எண்ணம் யாருடையது?
பாதியிலே போனகனவு
வரும்போதெல்லாம்
ஒவ்வொரு நிர்வாணஉடலையும்
ஒவ்வொரு கேள்வியுடன் கூட்டிவருகிறது .

Comments