Skip to main content

அனுக் கரு பிளவில்

அனுக் கரு பிளவில் 
ஒரு சின்னஞ் சிறு ஒளிகீற்றின் பிறப்பு 
எதற்கு என, ஏணி வைத்து காதை குடைகிறது எதற்கு 
வலியுடன் பின்னிரவு உறுப்பின் மாபெரும் பிளவில் ரத்தமும் ஜலமுமாய் கிடந்தாய் 
தென்கரையில் மூத்தவனும் வலக்கரையில் இளையவனும் கத்தி அழுது சிரிக்கையில் ஐந்து வருட இரவும் விளித்தே கடந்தது 
இரண்டு முளை க்காம்புகளும் பால் கொடுத்தே வற்றி வலுவிழந்தது
அவன் மூத்திரமும் மலமும்
இல்லாத வாசனைகளை ஆடைக்குள்ளே தங்க வைத்தது
உனக்கு பயந்தே கொண்ட உடலுறவின் பதபதப்பு தனியபோவதே இல்லை
உன் பிறிவு மூன்று மரங்களை வாய்க்குள் ஊனியது போல. ஓங்கி காற்றடிக்கும் சமயம் உன் கண்சுருக்கம் உயிரை அழுத்தி பிழிகிறது
பகல் முழுதையும் குடித்து விடும் அந்த பரிதவிப்பு
அத்தனை ஏக்கமும் பொத்தி நோக்கும் அரவணைப்பும் எதற்காக
தீ குச்சிதலை யில் தெறிக்கும் தீப்பொறிக்கு
சாம்பலாய் உதிரும் வாழ்வில்
எதற்காக?

Comments

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது