Skip to main content

Posts

Showing posts from March 6, 2011

வலிக்கும் ஆயினும் இன்பமாய் இருக்கும்

அன்பைப் போல் அதிகாரம் செலுத்துவது ஒன்றுமில்லை கொடியதுமதுதான், அது எதிர்பார்பதில்லை  தன்னையே வருத்திக்கொள்ளும்  தன் தேவைகளுக்காய் செய்யாமல் தருவதிலேயே இன்பம்காணும்  செய்வது கர்வமெனினும் எதிர் பார்ப்புகள் இல்லாததால் அன்பாகிறது இன்பமாகிறது  அழும் அழவைக்காது. நேசித்து பாருங்கள் அதை விட அழகானது ஒன்றுமில்லை  உள்ளே நரம்பின் அணுக்களில் குடையும்  வாழத்தொன்றும் ,வலிக்கும் ஆயினும் இன்பமாய் இருக்கும்  பைத்தியத்தின் முத்திய நிலை அன்புதான்  அது தெய்வீகமானது ,கிறுக்கு மிகவும் உயர்ந்தநிலையில் ஓன்று ஒன்றின் மீது உள்ள பற்றோ ,ஆசையோ ,ஈர்ப்போ,கவர்ச்சியோ அல்ல  காந்தம் போன்றது அன்பு அனைத்தையும் உள்ளிழுத்துக்கொள்ளும் அரவணைக்கும்  அதிகாரம் செலுத்தாது அபபடிசெலுத்துவது சுயனலமாகும் தொற்றுபோகும். கட்டுப்பாடுகள் இருக்காது கவலைகொள்ளாது கண்ணீரையே விரும்பும்  அசிங்கம் தெரியாமல் காயத்தில்  வடியும் சலத்தை நக்கும் நாயைப் போன்றது அன்பு  எதுவும் தெரியாது அதனால் தான் சொன்னேன் அன்பு பைத்தியமென்று  உள்ளே நுழைந்து பாருங்கள் துக்கமேன்பதே இல்லை...

முளைகலற்று சமமாக

நடிகையின் நீச்சல் உடை புகைப்படத்தில் மூழ்கி நீந்தினான் இளையசகோதரன். முத்தமிட நினைக்கையில் என் நிழல் எட்டி தடுத்து விட்டது மறைத்து வெளியேறிவிட்டான் மறுநாள் அப்புகைப்பட முகத்தில் சில திருத்தங்கள் மூக்கு மேல் நோக்கியும் முளைகலற்று சமமாகவும் காது திரும்பியும் புருவமற்று இருந்தது முகம் சுளித்து அதை சதைத் தெரிந்தான் சதை அதேதான் அழகு எண்ணத்தில் இருந்ததால்!