Skip to main content
மூன்று நாட்களுக்கு முன்புதான்

அந்த மரத்தடியில், முதன் முதலாக முத்தமிட்டோம் 

இன்றோடு
நான்கு நாட்களாகிறது அவளை காணவில்லை

யோனியிலிருந்து வெளியேறும் குழந்தையின்
நகர்வுதான்
நகர்ந்து கொண்டே இருக்கிறேன் .......
அந்த மரத்தில் இருந்து இலைகளெல்லாம்
உதிந்து கொண்டே இருக்கிறது ..........
பல நேரங்களில் எதையோ " சலசல" த்துகொல்கிறது
வானத்தில் நட்சத்திரங்கள் எல்லாம் இடம் மாறுகிறது
சூரியன் நகரநகர என் சூழ்நிலைகள் இன்னமும் மோசமாகிறது
நான் இன்னமும் அழவில்லை
அந்த மரத்தின் கிழக்கு நோக்கிய கிளையில்
நீண்ட நேரமாக ஒரு காகம் கரைந்து கொண்டிருக்கிறது
அவளை இன்று பார்த்துவிடுவேன் சில வேளையில் காகம்
மிகச்சிறந்த முன் அறிவிப்பாலந்தான் நான்
எழுந்து நிற்க வேண்டும்
அந்த மரத்தில் உள்ள பூக்கள் சில தரையிலும்
தலையிலும் கிடந்தன
என் வலது தோள்பட்டையில் பிசுபிசுத்த திரவம் இருக்கிறது
அதன் நாற்றமும் கததப்பும் உடலுக்கு தெரியவில்லை
அந்த முத்ததின் சூடு தனிவதர்க்குள்........
நான் அழுது விட்டேன்
நான் அழுவேன் ....
ஒரு வேளை தொடரலாம்
அவள் துற தேசம் போயிருப்பாளோ
நான் தனிமை பட்டு போனேன்
இந்த தும்மல் மட்டும்
வந்து கொண்டே இருக்கிறது ...........

Comments

  1. உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது