Skip to main content

குத்தவச்ச குமரி


வாயகட்டி வயத்தகட்டி நான் வேதச்சன்
வாய்க்காவெட்டி வரப்புவெட்டி நீர்பாச்சன்
கண்ணுரெண்டும் துண்கல மழவருமொ வராதோ 
மனசுரெண்ட உருளுதே 
வெதயொடு சேத்து யென போதச்சன்
தாய் கருவோடு இருந்த வாசனைய நா ஒனந்தன்
வரப்பு மேல தலைவச்சு கண்ணசந்தா
தாயி மடிமாரி கதகதப்ப இருப்பா
பச்ச பால் வசன வயக்காடு புழுதியில மணக்கும்
எங்கிருந்தோ வந்த வெள்ளசட்டக்காறேன்
நெல்லுக்கு வெல சொன்னா
உச்சி வெயிலுல சொக்கி நின்ன
யெனக்கு கத சொன்னா
பட்டினியில இல்லாத யென் வயிர
6 பெகுன்னா
நா சொன்ன
குத்தவச்ச குமரிக்கு கூட படுத்து யெந்தி சாதான்
வயெரு வீன்கும்ன
அசையாத கல்லுக்கு வீன்குறது அதிசயம் தாமல
புள்ள பொக்காத பொம்பள ன்ன
மானியம் வாக்ங்கிடு வாரேன்னா
மாய மாயிட்டான்.

Comments

  1. எவ்வளவு அழகாக சொன்னீர்கள்... மதுபானம் உற்பத்திசெய்பவன் கோடீஸ்வரனாகிறான்,சிகரெட் உற்பத்திசெய்பவன் கோடீஸ்வரனாகிறான்,ஆனால் உணவு உற்பத்திசெய்பவன் மாத்திரம் ஏழையாகவே இருக்கிறான்.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது