சூழ்நிலையின் சூழ்ச்சிக்குள்ளும்
சதையின் பிடிக்குள்ளும்
ஏகமாய் கட்டுண்டுள்ளேன்
நான் மீள்வதும் ,வீழாமளிருப்பதும்
முடிந்த ஒன்றெனில்
எதிர்காலம் எதற்கு ?
எல்லாம் அவன் மூலமாய்
நடக்க வேண்டுமெனில்
சுயசிந்தை எதற்கு ?
விதி உண்டெனில்
மதி எதற்கு ?
அனைத்தையும் அவனே செய்து
முடித்துவிட
நான் எதற்கு ?
நேரமே இல்லாதவனுக்கு
பொழுது போக வில்லை என்றால் ?
யாரைக் கேட்பது !
சுய இன்பம் காண விருப்பப் பட்டவனின்
சூழ்ச்சியால்
அண்டத்தில் நானும் ஒரு பிண்டம் !
யாவையும் எதோ ஒன்று செய்துவிட
எனக்குள் உயிரோட்டம் எதற்கு ?_ அப்படியானால்
நான் என்னதான் செய்கிறேன்
______..........பெலிக்ஸ்

Comments
Post a Comment