Skip to main content

காதலால் கடவுளானேன்

காதலால் கடவுளானேன்


  வாழ்கையில் பல நிகழ்வுகள் என்னை வேறு விதமான சிந்தனைக்குஇழுத்துச்சென்றிருக்கிறது.
 ஒரு சில நினைவுகள்மட்டும் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
 ஆனால்   சூழ்நிலைகள் அனைத்தும் வாழ்க்கையின் எதார்த்தங்களை,தத்துவங்களை, முடிவுகளை கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறது. உன்னுடன் சூழ்நிலைகள் எனக்கு ஏற்படுத்திய தருணங்கள் யாவும் எந்த ஒரு மாற்றத்தையும் தரவில்லை. காலம் உருண்டேடியது யாவையும் சதையாகவும் மிருகமாகவும் ஒன்றுமிலாததுமாகவும் புலப்பட்ட எனக்கு

உன்னை காணும் தருனைங்கள் இருப்பதாய் உலகில் அனைத்தும் உண்மையாய் இன்பமாய் யாவும் நமக்காய் .

துன்பம் தோழனாய் தோன்றியது ,ஆனால் உணர்விழந்து நின்றேன் ,சிந்தனையோட்டம் சீராகயில்லை சிரிக்க
தோன்றியது அழுகையும் இனிப்பாய்த் தோன்றியது, துக்கமில்லை ஏதோ ஒரு உணர்வினுக்குள் பீடிக்கப்பட்டேன்
யோகா தியானம் கொடுக்காத உணர்வு அது . என்னை அறியாமலே பார்க்கச்சென்றேன். அவள் பின்னாலே ஓடலானேன். அவள் வீட்டை விட்டு வெளியே வரும் நேரங்கள் என்னை அறியாமலே எனக்கு புலப்பட்டது. உண்மைதான் இங்கு டெலிபதி கற்றுக்கொண்டேன். அது ஒரு யோகா நிலை போல் இருந்தது. வண்ணம் பிடிபடவில்லை,வழ விருப்பம் இல்லை, வலி தெரியவில்லை, பணத்தேவை இல்லை எங்கோ சென்று கொண்டிருந்தது,எவை எல்லாமோ பிடித்தது அதிசயமான உணர்வுகள் தான் இவை. 


        அவளின் அன்பு அதிகமான தாக்கத்திற்கு உள்ளக கொண்டு சென்றது. மின்னலின் மில்லியன் வோல்ட் பவரும் இந்த சிறிய பூவினை ஒன்றும் செய்யவில்லை. எதிர்காலம் புலப்படவே இல்லை, தத்துவங்களோ இன்றுக்காக இப்பொழுது வாழுங்கள்.என்கிறது.இதை அறியாத அந்த சிறு வயதிலேயே அன்றைய பொழுதுக்காக மட்டும் வாழ்ந்தேன்.
 அவள் செய்வதை எல்லாம் செய்தேன், அவள் சொல்வதையெல்லாம் செய்தேன் நான் சொல்வதை எல்லாம் செய்து முடித்தால் சொல்லாமலும் செய்தாள்.மறந்து விடு என கூறியும் என்னால் இயழவில்லை. ஆம் அப்படித்தான்.... அப்படித்தான்.... அப்படித்தான்....நான் அதே உணர்வுடன் அப்பொழுது போலவே அதே நினைவுடன் அதே யோகநிலையுடன் இருந்தேன் 

பார்ப்பதுவும் பாவையுமவனும் பார்த்தப் பொழுது

காரணமின் றிகள்வுண்ட சிரிப்பை வடிப்பதுவும்

கண்கள் இறங்கி மனதின்கண் பிறிவிலோ
கல்லேறி வலிக்கும்நெஞ் சம் .
      

  எனக்குள் அனைத்தும் ஊடுருவிச் சென்றது உண்மையான தியானம் யோகா என்பவையெல்லாம் உணர்விழந்து ஒரு காரியத்தில் இறங்குவது என்பதை இயற்க்கை ஒவ்வொரு மனிதனுக்கு காதல் மூலமாய் வெளிப்படுத்துகிறது.

 தோற்ற பொழிவுகள் ஒன்றும் செய்ததில்லை, உன் அறிவோ, ஞானமோ தேவை இல்லை, அது எந்த விதத்திலும் உதவபோவதுமில்லை, உன் மென்மையான வருடல் வேண்டும், அன்பான சொற்கள், ஆழமான தித்திக்கும் இனிப்பான. நினைவுகளை ஏற்படுத்தக் கூடிய அளவிற்க்கு உன்னுடைய பாவனைகள் வேண்டும். பொருட்களின் தோற்றம், உன் உருவம் பல நேரம் காட்சிக்கு இல்லாதபோது சுய நினைவிற்கு வருவேன் அப்போது இவை எல்லாம் தோன்றும். அதுவரை என்ன செய்கிறேன், செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறியேன். ஏதோ புத்தி பேதலித்து போனவன் போல் திரிவேன், கொஞ்சல் மற்றும் மென்மையான கரங்களால் அணைக்கும்போது ரெத்தநாளங்கள் விரிவடைந்து குருதி மூளைக்குள் வேகமாக குடியேறும். சிரிக்க முடியாத, தெரியாத இன்பமாய் இருக்கும். காற்றின் அசைவால் கூந்தல் என் மூக்கின் துவாரங்களை அளவெடுக்கும், தும்மல் அதை வரவேற்கும். என் கணவன், புருஷன், எனை ஆள்பவன், என அவள் உச்சரிக்கும் போதெல்லாம் புவியைவிடவும் வேகமாக சுற்றி இருக்கிறேன்.
         மெல்லிய  விரலை இடது, வலதாய் அசைத்து "பைக்ல வேகமா போகக்கூடாது" என்ன சொல்லியத்தருணம், நடக்கவே ஆசைப்பட்டேன். ஏதோ ஒரு அன்னிச்சை செயலாகவே அதை மறந்தேன். எனது உடல் அடிக்கடி சோர்வை தழுவிக்கொள்ளும், பல நாட்கள் கவனித்தேன் புரியவே இல்லை, நீ வருவதாய் சந்திப்பதாய் இருக்கும் தருணங்களில் மட்டும் இப்படி இருப்பதை பின்பு உணர்ந்தேன் 
        

இருதய மொழியினை இருகண் மொழியும் 
இருநொடி பொழுதிலோ இனிமை _ இருந்தும்அவ்
நெருக்கமதோ கூடுதலினும் நெருக்கம் குறைதலில்
நெருக்கம் மிகும்கா தல்.  
               அதிசயமாய் வந்த இரண்டாவது சூரியன் நீ, பல விண்மீன்களில் என்னை ஈர்தவள் நீ,  நிலா வரும், போகும் நீயும் அப்படித்தான் ஆனால் நிலவைப் பற்றிய நினைவுகள் வந்து கொண்டிருக்கிறது ஏதோ ஒவ்வொரு பொருளும் ஏதோ ஒரு விதத்தில் அளித்துக் கொண்டிருக்கிறது . உன்னுடைய காதலினால் எந்த அளவு விற்கு வசீகரிக்கப்பட முடிமோ அந்த அளவு   உள்ளே சென்றேன் , எல்லோருக்கும் காதல் நீடிக்க வேண்டும் என்ற எண்ணம் சந்தோசத்தை ,காதலை அனுபவிக்க விடுவதில்லை ஆனல்,எனக்கு அப்படிஇல்லை எப்போதும் லகித்து போய் ஊரிவிட்டேன். முதல் நிலையை அடைந்தேன் முழுமை பெற்றேன் .பிரிவு பிளவு எனக்கு இல்லாமலே இருந்தது நான் காதலித்தேன் ,நான் உன்னை உள்வாங்கினேன் கிரகித்துக் கொண்டேன். கட்டிலில் படுத்து குழந்தைப் பேறு என்பதை எல்லாம் தாண்டி போனேன் .காமம் தோற்று போனது அன்பு அங்கே இல்லை ஆனாலும் இன்பமாய் இருந்தது ,
           மதங்கள் உடலுறவை அடிப்படையாக வைத்ததற்கு காரணம் புரிந்தது .பற்களை வெளிக்கொணராத உன் சிரிப்பு ,உதடு மட்டும் சமைத்து தரும் அந்த புன்னகையின் சுவையை அதை சொல்லேவேமுடியது .சிணுங்கிக் கொண்டே உடலை அங்கும் இங்கும் ஆட்டிக்கொண்டு நடப்பதை எல்லாம் விழி மூலமாய் சமிஞ்ஞையாக மூளைக்கு அனுப்பினேன் முடிவு பெறாத காட்சிகளாக அவை இன்னமும் வருடிக்கொண்டே இருக்கிறது .நான் ..........நான்.......,,,,,, ஐயோ புரியவில்லை
 எனக்கென்னவோ 
  காதல் தோல்வியில் தான் அழகாய் இருக்கிறது  !   .
           அன்பே உன் பார்வைகள் வினோதமான உணர்வுக்கு இழுத்துச் செல்கிறது .உன் அணைப்பில் ,அருகாமையில் சுயநினைவற்றே இருப்பேன் ,நீ எப்படி பார்க்கிறாய் அதை நீ உணர்கிறாயா எனக்கு தெரியாது ஆனால் நான் உணர்கிறேன் ,உனை நினைக்கும் பொழுதெல்லாம் ஒளியின் வேகத்தில் பறக்கிறேன். 


உன் முத்தம் என்னுள் எதையோ அனுப்புகிறது ,விஞ்ஞானம் எததை வேண்டுமானாலும் கதை கட்டட்டும் எந்த கார்மோனை வேண்டுமானாலும் சாட்சிக்கு கூப்பிடட்டும் தீர்ப்பு யார்ப்க்கமும் இருந்து போகட்டும் கவலையில்லை ,எப்படி ஒரு மனிதனின் கபடமற்ற நம்பிக்கை மரணத்தை வெல்லுமோ அதைப்போலவே நோயே வலியோ தீண்டியதே கிடையாது இது அவளுக்கும் தெரியும் ,காதலை அவளின்மூலமாய் வேட்டையாடினேன் வெறித்தனமாய் சிங்கம்போல் உறிஞ்சி குடித்தேன் இவையனைத்தும் சாதாரணமாய் சாதுவாய் சலனமில்லாமல் எனக்குள் மட்டும் நடந்தேறியது
.
                 நான் அன்பு செய்யும் அந்த ஒருவளால் மட்டுமே இதைச் செய்ய முடிந்தது மற்ற சதைகள் சதியாகவே தென்பட்டது ..    சிட்டுக் குருவிகளின் கீச்சிடும் சப்த்தம் ,சின்ன மாற அசைவில் காற்றில் மிதந்து வரும் இலையின் ஊடாக கீழ் அமர்ந்து என்னுடன் உறவடிக் கொண்டிருக்கும்
என்னவளின் கொஞ்சல் சப்த்தம் குறுக்கிட்டு குருவிகளை திசைதிருப்பும் 


அவைகளின் பொறாமை வெள்ளைக் சின்னங்களாக முதுகில் வந்துவிழும் எங்களை விட அதிக மகிழ்சியும் நெருக்கமும் ,மிகுந்த காதலும் கொண்டி ருக்கிறார்களே என்ற மனக் குமுறல் தான் ! 
                          இயற்கையே சில நேரங்களில் பிரமித்துபோய் மழை போழிவதுண்டு ,இருவரையும் நனைத்து வேடிக்கை பார்க்கும் ,குளிரில் நடுங்கவிட்டு இடிபோல கைகொட்டி சிரிக்கும் 
,சூரியனை அனைத்து விட்டு என்ன செய்கிறார்கள் என கவனிக்க மின்னலை அவ்வப் போது அனுப்பி விடும் .
                        மழை நின்றபின் சூரியனே ,மேகங்களுக்கு நடுவே ஒளிந்து கொண்டு ரகசியாமாய் எட்டிப்பார்க்கும் என் தலைவியின் மிருதுவான பாதங்கள் மெதுவாய் சாலையில் சிதறிக்கிடக்கும் மழைத்துளிகளில் சரணடையும் போது மரங்கள் தங்களை உலுக்கிக் கொள்ளும் பல நாட்களாகவே கவனித்திருக்கிறேன் உலகின் பல ரகசியங்கள் புரிவதே இல்லைதான்  அவை எப்பொழுதாவது வெளிப்படும் எனக்கும் ஒருதருணம் கிடைத்தது வியந்து போனேன் .அவளின் பாதம் தொடுவதற்காய் பதறிக்கொண்டு தங்களை அத்துளிகளுடன் இணைத்துக் கொள்ளஇலைகளை உதறிவிட்டு கீழே இறங்குவதை    கேள்விபட்டேன். .
                 கற்பனைகள் ,கனவுகள் சில நேரங்களில் பழிக்க வில்லை என்றால் கடவுள் என்றோ இறந்திருப்பார் .நான் கூறியது கர்ப்பனைபோல் இருந்தாலும் நடந்தது   என்னவோ உண்மைதான்
                   அவளின்  சிறிய கைகள் எத்தனை தடவை அழகாய் அணைத்து மார்போடு எனை அமர்த்தியிருக்கிறது அப்பொழுதெல்லாம் வார்த்தைகள் எங்கோ தற்கொலை செய்துகொள்ளும் அவை பிழைத்திருப்பதே இல்லை ,அலை வரிசையினை நான் பார்த்ததில்லை ஆனால்  எங்களுக்குள் சமிஞைகள் பரவியது ஆனால் வாய் அசையவில்லை  பேசவில்லை ,அந்த பார்வையில் உடலின் வேப்ப்ச்சூட்டில் ஏதோ அலைவரிசை எங்கள் எண்ணங்களை சுமந்துசென்று கொடுத்தது மௌனமாய் இருந்து விட்டு பேசாமலே பல மணிநேரம் சிரிப்போம் சுற்றியிருப் பவர்களுக்கெல்லாம் பைத்தியமாய் தோன்றும் குறு குறு வென பார்ப்பார்கள் ஆனால் பாசை எங்களுக்கு புரியும் நாங்கள் பேசிக்கொண்டுதான் இருப்போம்  . அந்த நாட்கள் எப்படி முடியும் உயிரே நினைவுகளை எப்படி விடமுடியும் ,அந்த நியுரான் புதுப்பிக்க பட்டுக் கொண்டிருக்கிறது ,உலகில் ஒவ்வொரு நொடியும் பல அதிசயங்களை நடத்திக்கொண்டே இருக்கிறது         
    ஞானத்தை தேடி ஓடினேன் ,பல புத்தகங்கள் சவைத்து ரசத்தை குடித்தேன் ஒன்றும் நடக்க வில்லை,இங்கோ இவளால் சரி தவறு யதயுமே உணருமுடுயாத நிலைக்கு உள்ளானேன் ,யாரையும் பாதிக்காத எனக்காக நானே அவளால் அதவும் தொடுதலின்ற்றியே ஆக்கி கொண்டேன் ,இத்தனையும் நான் செய்ய வேண்டும் என எதிர்பார்த்து நடந்தது இல்லை தானாகவே வந்தது அதுவாகவே சென்றும் விட்டது ,

             
 ஆனால் அந்த நினைவுகளில் வோவ்வோருமுரையும் மூலமாகிறேன் 
.உண்மை தான் கடவுள் (கட + உள் = கடவுள்) ஐயோ எதை எழுதுவது ......அந்த நிலையை எப்படி விளக்குவது ஐயோ !!!!!!......கடவுள் நான் கடந்தேன் என் உள்ளம் மனம் உடல் யாவையும் கடந்தேன் கடவுளானேன் !`~  
           .அவள் திருமணம் செய்யவில்லை என கூறினாள் நானோ தெருக்களின் விதியில், புகையும் சப்தங்களும் மனிதனை குடைந்து கொண்டிருக்க ,மரம் உதிர்த்த இலைகளின் மீது நாம் நடப்பது போலவே அந்த இலைகளின் நிலைமையில் நான் இருந்தேன் என் மீது பூமி உருளுவது போல் இருந்தது சாகாத வலி .எந்த சத்தமும் என்னுள் நுழையவில்லை இரத்தம் நாளங்களை கீறிக்கொண்டு தோல் வழியாய் பீறிட்டு  வெளியே  தெறித்ததுபோல் இருந்தது                           
 .        எந்த முடிவும் தெரியவில்லை கண்கள் தெரியவில்லை யாவும் இருளாய் ஒளியாய் இருந்தது .அழுதுகொண்டே இருந்தேன் உச்சம் உச்சம் சென்று கொண்டிருந்தேன் இத்தனையிலும் எனை நான் வெறுக்கவில்லை 

               ,அழுதேன் அதற்குள்ளும் சென்று கொண்டே இருந்தேன் ஆழமாய் இன்னமும் இன்னமும் ஆழமாய் ஆம் ........அது அழகாக இருந்தது அவளை அதிகமாக அப்பொழுதும் பிடித்தது அருமையானவள் என்னை அழ வைத்ததிற்கு நன்றி அவளை ரசித்தேன் முத்தமிட்டேன் அழுதேன் .அங்கே நான் இல்லை என் சதை மட்டுமே அங்கு கிடந்தது 
அவளின் மூர்க்கம் அவ்வளவு அதிகமாய் இழுத்தது என் தேடல் .....நான் அவளை தேடுவதில் ஆவல் கொள்கிறேன்.பல இரவுகள் பதறி எழுந்தேன் அவள் கூப்பிடுவது போல் இருக்கும் 
              எத்தனையோ முறை என் வீட்டு கதவை அவள் பேரை சொல்லி தட்டினேன்அறியாமலே நடந்தது  .அவளின் தீண்டுதல், சுட்டு விரல் பட்டாலே பூவாய் உருண்டு பிரண்டு உள்ளம் மகிழ்ந்து நெளியும் .பேசும் போ தவறி தெறித்து விழும் எச்சில் எத்தனை அமுதத்திற்கு சமம் . அவளின்மடி உறக்கம் அமைதியின் உச்சம் .தலை கோதி  விட்டால் பாதம் வரை பதம் பார்க்கும் பனித்துளிகளின் கூட்டம் .புரியவில்லை எப்படி வர்ணிப்பது என்று .என் உயிர் நனைந்த நேரம் உடலில் எத்தனை விதமான ஹார்மோன் மாற்றங்கள் அங்கே அவளும் இல்லாமலே போனாள் . ஸ்பரிச வாசம் இருந்து கொண்டிருக்கிறது இது நோய் என கூறினாலும் பரவா இல்லை
                உணர்கிறேன் அழுகையிலும் அவளை உலகை முழுமையை உணர்கிறேன் இன்னமும் செதுக்கப்படுகிறேன் .எனக்கு வந்த காய்ச்சலுக்கும் வலிக்கும் மருந்து தேவை பட்டதே இல்லை ஆம் உண்மையான எதிபார்ப்பு அல்லது  அன்பு எதையும் குணமாக்கும் என்ற  உளவியல் அங்கே  உண்மையானது. மழை காலத்தில் கொட்டிதீர்க்கும் பருவ மழைபோல அன்பை பொழிந்தாள், நான் இல்லாமல் வாழ இயலாது என்றாள் . நன்றாக தெரியும் அவளால் முடியாது ,செத்து விடுவதாய் செய்தி  அனுப்பிக்கொண்டே இருப்பாள் எத்தகைய தருனங்கள் வந்த போதிலும் எனை பார்க்க தவறியதே இல்லை எதுவும் எப்படியும்  போகட்டும் பூமி உடையட்டும்
சுக்குநூறாய் போகட்டும் நான் கல்யாணம் செய்வதாய் சொன்னாள் எனக்கோ தெரியாது அது உனக்குள் ஏற்கனவே எழுதப்பட்டது அதையே செய்வாய் இன்று நான் சிரிக்கிறேன் அழுகிறேன் உன்னால் உறங்க மறுக்கிறேன் உன் அசைவுகள்  சித்தரவதை செய்கிறது எனக்கு ஒன்றும் தெரியாது இன்று பிடிக்கிறது என்றேன்              
.               ஆம் அவள் மறுத்த பொழுது அந்த நொடி துண்டு துண்டாய் சிதறி போனேன்  அப்பொழுதும் தொலைந்து போனேன் கதறி கதறி அழுதேன் என் தலை துண்டாய் வெட்டப்பட்டது போல் இருந்தது என்னால் அவளை தடுக்க முடியாது ஏனென்றால் அவளுக்கு என்னிடம் அவ்வளவு சுதந்திரம் இருந்தது  ஆனால் அழுகையோ        
அழுகையோ எந்த ஒரு மாற்றத்தையும் தரவில்லை நான் அழுகிறேன் எனக்கு அழுவது பிடித்திருந்தது .அவளுக்காய்  அழுகை வேண்டு
          காதலிக்கும் போது இருந்த அதே உணர்வு
இதிலும் உள்ளது ஆனால்  பாதை வேறு அவ்வளவுதான் ! அவள் முன் ஊமையாக இருந்ததில்லை பேசிக்கொண்டேதான் இருப்பேன்
                ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் எனை சூழ்ந்து கொண்டது பட்டாம் பூச்சிகள் எனை மொய்த்தது எறும்புகள் போல சாரை சாரையாய் அவள் சிரிக்கும் சத்தம் எனை ஊடுருவிச் சென்று கொண்டே இருந்தது .இது பைதியாமாக எப்படி வேண்டு மானாலும் இருந்து போகட்டும் பரவாயில்லை
.ஒன்றை கூறுகிறேன் 
                  உலகில் புனிதம் எதுவென்று? கேளுங்கள், தொலைந்து போவதுதான் ,துங்குவது புனிதம்தான் அந்த நிலையை தூங்காமலே பெறுவது தியானம் ஞானம் . புரிகிறதா நான் என்ன சொல்கிறேன் 
            உண்மை தான் நான் என்னை தொலைத்தேன் ,மறந்தேன் .ஞானம் தியானம் புனிதம் எல்லாம் அடைந்தேன் . ஒரு நாணயத்தின் இரண்டு பக்கமல்ல நாங்கள் ஒரே பக்கமாய் இருந்தோம் .அப்படித்தான் அதில் எந்த வித மாற்றமும் இல்லை இதுவே புனிதம் . 
                    அவளுடன் ஆயிரமாயிரம் நாட்கள்,வாழ வேண்டும் போல் இருந்தது ,மெய்தான் அது முழுவதும் உண்மை ,களவாடப்பட்டேன் .இணையும் போதும் பிரிவிலும் ஒரே நிலையிலே இருந்தேன் ,எனக்கு எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை ,முத்தான பற்கள் கடிக்கவே ஆனாலும் எனக்கோ மென்மையாகவே உள்ளது அதிலிருந்து வரும் வார்த்தைகள் எதுவானாலும் அழகாய் உள்ளது .அதே மேன்மை இன்பம் ,புரிதலின்றியே புரிந்து கொண்ட உணர்வது .அதிசயம் அழுகை பிடித்து போன 
           அதிசயம் ,மனிதர்களே ஓன்று மட்டும் நிச்சயம் எந்த காரியத்தை முனைப்புடன் மூழ்கி செய்கிறோமோ அங்கே முழுமை உள்ளது அங்கே ஆம் தொலைந்து விடுகிறோம் உன்னை நீ மறந்து விடுகிறாய் ,அப்படி மறக்கும் பொது புனிதம் உருவாகிறது என்பதை உணர்ந்து கொண்டேன் பின் ஒவ்வொரு செயலிலும் மூழ்கலானேன் ஒவ்வொரு நொடியும் எப்பொழுதும் முழுமையில் மூழ்கி கடவுளானேன் …………… . கடவுளானேன் …………… கவுளாய் இருக்கிறேன் 

                  
                              என் காதலியும் கடவுளும் ஒன்றுதான் 







Comments

Popular posts from this blog

திருச்சியில் 4 கோடி ரூபாய் கடத்தல் தங்கம் காருடன் பறிமுதல். நபர்கள் கைது.

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டிகள், திருச்சி வழியாக சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி சமயபுரம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு காரில் 3 சூட்கேஸ்களில் சுமார் 7.5 கிலோ அளவுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது. அந்த தங்க கட்டிகளையும், அவர்கள் வந்த காரையும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்த முகமது இர்பான், அஜ்மல் கான் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். தங்கக் கட்டிகளை சென்னையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அந்த நகை வியாபாரி யார் என்பது குறித்தும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கக் கட்டிகள் எப்படி கொண்டு வரப்படுகிறது, இதற்கு யார் உதவுகிறார்கள் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது
நான் இந்த உலகத்திற்கு கடன் படவில்லை காரணம் நான் நானாக வரவில்லை இங்கே எனக்கு எதுவும் கடனாய் கிடைப்பதும் இல்லை நான் கடன் கொடுப்பதும் இல்லை காற்று நிலம் நீர் நெருப்பு என அனைத்தும் இலவசமாகவே கிடைக்கிறது, நான் சுதந்திரமாக வந்தவன் ஒன்றுமில்லாமல் பிறந்தவன் ஆனால் பசியோடு மட்டும் பிறந்தேன் எனக்கு அரவணைப்பு தேவை இல்லை அன்பு தேவை இல்லை கோபம் இல்லை ஆனால் இந்த வாழ்க்கை சாகவே பிறந்தாற்போல் உள்ளது எனக்குள் தற்கொலை எண்ணத்தை விதைத்தது யாரோ மிருகங்களை போல் குழந்தையை போல் அன் நேரம் மட்டும் பயந்து விட்டு போகவே ஆசைபடுகிறேன்