கால்கள் அலையும் சத்தம்
அதிர்ந்து அடங்கி
தலை குனிகிறது மானுட தன்மை
விரிந்து கிடக்கும் ஆபாச பேனர்களால்.
என்ன?
நிழல் போன்ற ஜடத்துவமே
மழுங்கடித்து விடுகிறது மனதை.
பலவீனம் யார் பக்கம்?,
உறுமும் வாகனங்களிடையே
விபத்துக்குள்ளான
உருவம் தொலைத்த உடலொன்று
பதறவைக்கிறது ,
அழுது கொண்டு வந்த
மனைவியின் முந்தானைச் சரிவில்
கொதிநிலை மாறுகிறது
பின்மாறுகிறது!

Comments
Post a Comment