Skip to main content

ஆம்பளலேடி ?!













எல்லோரும் செய்வதையே
செய்து களித்தனர்
என் பெற்றோர்.
எல்லோரும் போலவே மாசமானாள்
என் தாய்
எல்லா ஆண் பிள்ளை போலவே
பிறந்து தொலைந்தேன் ,
சிரித்தேன் ,உண்டேன்

ஆடினேன்
காமமுற்றேன் !
ஆணாய் அழகாய் !


ஆனால்
ஆணையே அழகென்றேன்
எங்கிருந்தோ வந்தது வெட்கம் !
தெரியாமலே சீண்டுகிறது கூச்சம் !
உலகம் ஆண் என்கிறது
உள்ளம் பெண் என்கிறது
மதம் சாபம் என்கிறது

ஆணாய் இருக்க
விருப்பப்படுகிறேன் _அப்பொழுதே
பெண்ணாய் இருப்பதை உணர்கிறேன்

மாநகர வீதியிலே
மனம் நோக சித்தரிப்பார்
மனமில்லா சில மனிதரோ
தனியே வா என வந்தழைப்பர்
கல்வியை இடைமறித்து
கலங்கடிப்பார்
வேலை தரமறுத்து
உள்ளம் வெந்து போக _தீவைப்பர்

தற்கொலை செய்து கொள்ள
தைரியம் கொடுக்க வில்லை
தன் மானத்துடன் வாழ
பால் உறவையும் கொடுக்கவில்லை
அணைத்திடவாவது
ஓர் உயிரைக் கொடுத்தாயா ?
தாயே தள்ளி நிற்க !
யாரிடம் தயவு கேட்டபது ?

கடவுள் மன்னிப்பவரா ? தண்டிப்பவரா ?

கேட்காமல் கொடுப்பது தானம்
கேட்டு கொடுப்பது பிச்சை


இரண்டிலும் பிச்சை ஒட்டி இருக்கிறது
இச் சொல் விடுபட இரண்டுபேரும் திருந்த வேண்டும்
அப்படியானால் உங்கள் கடவுள் ......!?


மனிதர்களே !!!
உங்கள் கடவுள் ஆணும் பெண்ணுமாய்
இருக்கலாம்
நாங்கள் இருந்தால் சாபமா ?

இயற்க்கை
உங்களின் காம பிரதிபலிப்பில்
விளைந்த மக்கள் தொகையை
சமநிலை செய்யவே
எங்களை சம்மதித்திருக்கிறது.

முன் ஜென்மத்தில் நாங்கள்
காம பித்தன் என்றால்
இச் ஜென்மத்தில் நீங்கள் யார் ......?
அப்படியானால் அடுத்த ஜென்மத்தில் ...........?

கடவுள் என்ற பெருமையில்
நீயோ !
காட்சியளிப்பதில்லை
காட்சி அளிப்பவனையும்
ஒழுங்காய் படைக்கவில்லை
எலோருக்கும் உன்படைப்பில்
சிறுகுறை உண்டு
எனக்கோ வாழ்வே குறை !

  •                                       _____.......பெலிக்ஸ் 

Comments

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது