Skip to main content

என்ன நடந்து விட்டது நமக்குள்










காய்ந்த இதயத்தை கண்ணீரால்
நனைத்தவன் நீ
சுருங்கிக்கிடந்த வயிற்றை
சுருக்கெடுத்தவன் நீ
தோழமை என்ற பெயரில் _வந்த
தாயுமானவன் நீ
புரிய முடியாத சோகவாழ்வில்
பருவமழையாய் வந்து போனாய்
நீ தீமையே செய்தாலும் நன்மையாய்
தெறிவதென்ன ?

நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்
எனும் பொழுதில்
நீ எனக்கு ஏதாவது செய்துவிடுகிறாய் !
தாய்மை அறிவேன்
காதல் அறிவேன்
நட்பை மட்டும் உணர்ந்தேன்
என்ன எதிர்பார்த்தாய் என்னிடம்
56kgசதை எலும்பை தவிற
ஒன்றுமில்லையே !
தூரமிருந்தே என் துக்கத்தை
துரத்துவது என்ன மாயம்
மொழியின் இலக்கணம் தெரியாதவனே
நட்பின் இலக்கணம் நடைபோடுவதென்ன

கல்வி எதற்கு
அறிவினை திறந்து
மனதினை புதைக்கவா !

மனிதனை இவ்வுலகில்
சந்தித்தேன் என்ற பெருமை
என்றுமே எனக்குண்டு
கலவை இல்லாத நட்பு
என்மீது ஏன் ?
தாய்மைக்கு ஈடான உன் நட்பு

ஆம்
இரண்டாவது முறையாக
நான் உன்னில் கருவுற்றேன்
கர்ணனை பார்த்ததில்லை -நீ
இல்லை என்று சொல்ல _என்
செவிப்பறைகள் கேட்டதுமில்லை !

எங்கிருந்தோ வந்த நான்
இங்கேயே இருக்கும் நீ
இங்கேயே இருக்க
எங்கோ அங்கே நான் போக
நீ ஏன் மறுக்க வேண்டும்
நான் ஏன் தயங்க வேண்டும்
என்ன நடந்து விட்டது நமக்குள்
                                              ________...........பெலிக்ஸ் 

Comments

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது