யார் பத்தினி ? யார் உத்தமன் ?
அழுக்கென்பது எது ?
யார் அழுக்கு?
அழுக்கில்லாதது எது ?
அழுக்கின் உறைவிடம் எது ?
சுத்த மென்பதே அழுக்கின் பிம்பம் தானே !
அழுக்கைப் பற்றிய சுத்தமான சிந்தை இல்லையேல்
சுத்தமாய் இருப்பது எப்படி ?
அழுக்கை பற்றிய அறிவு இல்லையேல்
எது சுத்தம் என்பதில் நிலை இல்லாமல் போகும் !
கள்ளக் காதலை நினைக்காத பொது
கணவனை மறந்து விடுவர் !
தகாத உறவினை மறந்து விட்டால்
உண்மைக் காதல் மறைந்து விடும் !
அடுத்தவரின் பால் உள்ள ஈர்ப்பினை
நினைத்துக் கொண்டிருக்காவிட்டால்
எப்படி (கணவனுக்கு ) ,மனைவிக்கு
உண்மையாக முடியும் ?
சிந்தையில் பிழை இருந்தால் தான்
செயலில் உண்மை விளங்கும் !
அப்படியானால் யார் சிறந்தவர் ?
______.........பெலிக்ஸ்

Comments
Post a Comment