Skip to main content

இருப்பு


கேள்வி எங்கிருந்து வருகிறதோ
அங்கே
பதில் கேள்வி நான்
இருக்குமென்பது வாதமென்றால்
எனக்கில்லை
இல்லை என்றால்
எனக்கு இருக்கும்.
இல்லாததிலிருந்து வந்த
இருப்பிலே
இருந்து இருப்பதையும்,
இருந்து இல்லாததையும் வாதிப்பேன்,
இருக்குமென்பேன்
இல்லை என்பேன் முடிவு
இல்லாததாய் இருந்த ஒன்று என சொல்லி ஒன்றுமில்லை என்பேன்
அதிலே ஒன்று இருக்கிறதென்பேன்
 கேள்வி எங்கிருந்து வருகிறதோ
அங்கே பதில் கேள்வி நான்
இருப்பதில் ஒன்றுமில்லை என்பேன் ஆனால்
இல்லாததில் ஒன்று இருக்கிறதென்பேன்
தொடக்கமும் முடிவும் ஒன்றுதான்
எங்கே  முடிகிறதோ அங்கே தொடங்குகிறது
தூரமில்லை எதுவும் தூரமில்லை ஒரேயிடத்தில் தான் இருக்கிறது
எதுவும் தூரமில்லை
கேள்விக்கு பதிலுடன் கேள்வியாய்?

Comments

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது