பிறந்ததிலிருந்து கண்கள் அழுதுகொண்டே இருக்கிறது நீரும் வற்றிய பாடில்லை பிறப்பின் கர்மமும் ஓய்ந்ததாய் இல்லை
கழுத்து இருக்கப்பட்டு மரத்தின் நுனியில் தொங்கவிடப்பட்ட வாழ்க்கை
நரம்புகள் கிழிந்து ரத்தம் கொட்டித் தீர்த்தும் அடங்கி விடாத அழுகை
திரும்பிய பக்கமெல்லாம் கொட்டி கிடக்கும் சோகக்குழி
திண்ணும் உணவெல்லாம் நாற்றமெடுக்கும் மலம்
கணவு வரை நீளும் மலச்சுமை
திராவிடம் தெருவில் வீசியது
இடதுகையோ சூம்பி நிற்கிறது
வலதோ வலுக் கட்டாயமய் உறுப்பை பிடித்து தொங்குகிறது
மதம் அம்மணமாய் அழைகிறது
கழுத்து குழியில் ஓர் அதிசயம் நிகழவேண்டும்
வலிக்கும் போதாவது கத்ததெறிய
Comments
Post a Comment