அவள் கூந்தலில் ஒருகவிதை
தொங்குகிறது,
நெற்றியில் ஓன்று ,
இரண்டு கண்களில் உருண்டு
நிற்கிறது சில கவிதைகள்,
கண்ணக் குழியில் ஒன்றும்
உதட்டில் இரண்டும்
ஒழுகிறது கவிதை .
தொண்டைக் கிடங்கிலும்
மார்பக மேட்டிலும்
குப்புற கிடக்கிறது மூன்று கவிதைகள்.
இடை நெளிவுகளிலும்
தொப்புள் குட்டையிலும்
நெளிந்து கொண்டிருக்கிறது
ஐந்தாறு கவிதைகள் .
பெண்மையிலும்
புட்டத்தின் வீக்கத்திலும்
தலைகீழாய் நிற்கிறது நான்கு கவிதைகள்.
தொடையில் சிலவும் குதிங்காலில் சிலவும்
கவ்விக்கொண்டிருக்கிறது .
கவிதையுடன் உலாவரும் பெண்
கண்களில் கவலை
மல்லார்ந்து கிடக்கிறது _இவன்
என்று விடுவான் கவிதை எழுதுவதை..........
தொங்குகிறது,
நெற்றியில் ஓன்று ,
இரண்டு கண்களில் உருண்டு
நிற்கிறது சில கவிதைகள்,
கண்ணக் குழியில் ஒன்றும்
உதட்டில் இரண்டும்
ஒழுகிறது கவிதை .
தொண்டைக் கிடங்கிலும்
மார்பக மேட்டிலும்
குப்புற கிடக்கிறது மூன்று கவிதைகள்.
இடை நெளிவுகளிலும்
தொப்புள் குட்டையிலும்
நெளிந்து கொண்டிருக்கிறது
ஐந்தாறு கவிதைகள் .
பெண்மையிலும்
புட்டத்தின் வீக்கத்திலும்
தலைகீழாய் நிற்கிறது நான்கு கவிதைகள்.
தொடையில் சிலவும் குதிங்காலில் சிலவும்
கவ்விக்கொண்டிருக்கிறது .
கவிதையுடன் உலாவரும் பெண்
கண்களில் கவலை
மல்லார்ந்து கிடக்கிறது _இவன்
என்று விடுவான் கவிதை எழுதுவதை..........

சூப்பர்.......
ReplyDelete