Skip to main content

என் மூச்சு துவாரத்தில் ஒரு சுண்டெலி

ஒரு சுண்டெலி என் மூச்சு துவாரத்தில் நுழைந்து விட்டது 
உள்ளிருந்து கீச்சிடுகுறது........... 
அசை வற்றுள்ளேன்,
அவள் சரியான தூரத்தில் நிற்கிறாள் 
என் நுனிநாக்கு தொட்டுவிடும் இடைவேளை.
அவளோ மூச்சற்று இறந்து போனாளால்
ஸ்பரிச தொடுதளுக்காய்
இருளும் ஒளியும் பிணைந்து கிடக்கிறது
சவம் போல ஒலியற்று நிற்கிறது சுற்றம்
ஒரேஒரு எலி மட்டும் மூச்சிரைக்க
அறையில் சுற்றி வருகிறது...............
எந்த காதலர் களுக்கும் கிடைத்து விடாத
காலம் கூட்டி கொடுத்த கனவு அறை,
அவள் ஸ்தனங்கள் திமிறுகிறது என்
கைகளை பார்த்தவாறே,
எந்த சூழ்நிலை க்காகவும் விட்டுவிட முடியாத
நேரமது ,
மூச்சிரைக்கும் எலி வடகிழக்கின் ஓரத்தில்
முறைக்கிறது ,,
சாயிந்து நின்றவள் என்நேராய் திரும்பி விட்டாள்
இன்னும் ஒருநொடிக்குள் லச்சதில் ஒரு மணித்துளியில்
சந்திதுவிடுவோம் ....
தூரம் சிறிதாயினும் கடந்து விட யுகம் வேண்டுகிறது
அவள் இடது தொடையின் பின்புறத்தில் தொடுகையில்
ஒரு எலி என் மூச்சு துவாரத்தில் நுழைந்து விட்டது
நான் காத்திருந்த பொழுதும் வலியுடன் நிலத்தில் வந்து விழுந்த நொடியும் வீணாய் போனது
எலி கீசிட்டு கொண்டே இருக்கிறது .................???????
என் பெயர் : வனராஜ்
அவள் பெயர் : மும்தாஜ்

Comments

  1. அருமை வலி என்பதை வலியுடனே சொன்னது......

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது