Skip to main content

புல் (ஆல்கஹால் )

நரகத்தில் எனை தள்ளி,
பவ்வியமாய் சொர்க்கத்தில் மிதந்துருளும்
என்கணவா!
ஆசை இன்றியே ,முரட்டு காமத்திற்கு
எத்தனை தடவை இனங்கிஇருப்பேன்
ஆசைகளை எல்லாம் துறந்தேன்
சத்தியமாய் சொல்லுகிறேன் மார்கழி மாத
இரவிலும் நித்திரைக்கு பயப்படுகிறேன்
மன்னவன் தலை குனிந்தே வருவான்
முத்தத்தால் நனையவேண்டிய முந்தானையில்
மலக்கிடங்கை ஊரெல்லாம் சுமந்து வந்து
என் முதுகிலே கொப்பளிப்பான்
மல்லிகையும் மணம் நொந்து போகும்
அளவுக்கு வாசனையும் தருவான் .
அனேக நேரங்களில் ,
மனைவியையே பலாத்காரம் செய்த முதல்
கணவன் நீயாகத்தான் இருக்க முடியும் .
பல முறை சொல்லியும்
எனது மூக்கும் கேட்டகவில்லை உனது வாயும் கேட்க்கவில்லை
புல் (ஆல்கஹால் )ஆனாலும் புருஷன் என மாற்றிக்கொண்டேன்!

Comments

  1. //மனைவியையே பலாத்காரம் செய்த முதல்
    கணவன் நீயாகத்தான் இருக்க முடியும் //.
    மனைவிகளைக் கேட்டால் தெரியும்,எத்தனை கணவர்கள் அப்படிப் பட்டவர்கள் என்று!
    நன்று.

    ReplyDelete
  2. உணர்வு பூர்வமான கவிதை...ஆனால் தலைப்பு மட்டும் இன்னும் நீங்க யோசிசிருக்கலாம்னு எனக்கு தோணுது....

    ReplyDelete
  3. settings இல் wordverification option மட்டும் எடுத்துருங்க..இன்னும் கமெண்ட்ஸ் போட எங்களுக்கு ஈஸி ஆ இருக்கும்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது