Skip to main content

மது என் காதலி




சனமெல்லாம் எழும்முன் 
அவளைக்கான ஆசைப்படுகிறேன்
தெருவிளக்கு அணையும்முன்
அவளை ஒருமுறை இறுக்கி அணைக்கிறேன்
சூரியன் பார்க்கும் முன்
கண்னோளியால் தடவிவிடுவேன்
துங்கும் முன் ஒருமுறை குடித்திடுவேன்
இடையில் விழித்தெழுந்தால்
மறுபடியும் மூச்சுத்திணற குடித்திடுவேன்
அவளுடன் உறவு கொள்ளும்
போ தெல்லாம்
எனை மறந்து விடுகிறேன்
உச்சத்தின் போது
எனையிழந்து செயலிழந்து
மயங்கி விடுகிறேன்
எத்தனை நோய்க்கு
அடிப்படை எனினும்
முத்தமிட்டு விழுங்குவேன்
கசப்பாய் இருந்தும்
உன்னை
நேசிப்பதால்
பத்து கட்டளைகளில்
ஒன்றை கடைபிடிக்கிறேன்
உன்னை தினமும் நினைப்பதே
நோயாகிப் போனதெனக்கு
என் உயிரை வாங்கும்
சரக்கு (ஆல்கஹால்).
உலகில் அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும்
பெண் நீதான்
எத்தனை புருஷன்மார்கள் உனக்கு
கணக்கில்லை அதற்க்கு
உண்மையை காக்கவைக்கும்
அரும் மருந்து நீதான்
சுகத்தினூடே மரணத்தைக்
கொடுக்கும்
கடவுளும் நீதான்
பெருத்த சோகத்தில்
ஆறுதல் நீ மட்டும் தான்
உயிருள்ள நாளளவும்
உன்னுடன் படுத்திட
நினைத்தேனே
வாதம் கொடுத்து
வணக்கமிட்டு
சென்றுவிட்டாயே !
அதிகம் உனை
நேசித்ததாலா இந்ததண்டனை
இனியவளே
உனை அருந்த
தடுப்பதேன்?
நீயும் மனுசியைப் போல
இடையில்
அறுத்து விட்டாயே !

Comments

  1. மேதகு.எம்.ஆர்.இராதா அவர்கள் திரையில் சொன்னதை அழகான வார்த்தைகளில் சொல்லிவிட்டீர்கள் அருமை....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது