அவள் என் அருகில் இருந்திருந்தால்
முத்தமிட்டு இருப்பேன்
தனியறையில் அமர்ந்திருந்தால்
உடலுறவு வைத்திருப்பேன்
காதலிக்கும் போது
காமம் முளைவிடாமலில்லை
வானம் காதலென்றால்
காமம் நிலவைப் போல் இருந்தது
அது
சூரியனாய் மாற இடம் தறவில்லை
ஆனால்
பார்வையில் நாங்கள்
நிர்வாணமானோம் !
பனித்துளிப் போல சுருங்கி
சிலநேரம்
பிரபஞ்சமாய் வெடித்து சிதறினோம்
ஒவ்வொரு பெண்ணும்
காமத்தை விதைகிறாள்
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்
நான்
காமத்தை விதைக்கிறேன்
ஆனால்
அவளிடமிருந்து மட்டும்
சமிஞைகள் வருகிறது
அவளை காதலிக்கும் முன்
அவளும் எனக்கொரு
உபப்பொருள் தான் .
அவளை தேடுகிறேன்
என் தனிமையை
களவாடிக் கொள்கிறாள் !
எல்லா பெண்ணின் அழகையும்
ரசித்தாலும்
அத்தனை ஆசைகளையும்
அவளுடன் நடத்த
திட்டமிட்டதால் !
அவளை தேடுகிறேன்

Comments
Post a Comment