Skip to main content

வயதுக்கு வந்ததால்!





கோன்ஐசும் கோலி குண்டும்
நிறையவே கிடைக்கும் ,
மிதிவண்டியின் பின்னால்
அமரவே அதிக வாய்ப்பு கிடைத்தது
எனக்கோ
சிறு ஏக்கம் உண்டு
வயது மூத்தவர் களை எல்லாம்
பார்க்கும் போது
பெரிய ஏக்கம் உண்டு
எங்கள் ஊரின் வழியாய் செல்லும்
ரெயிலும் ,பேருந்தும்
எனை அதிகம் சுமந்ததுண்டு
பனை ஏறு பாவனையும் ,தெருவிளக்கு கம்பத்தில்
ஏறு பாவனையும்
அதிகம் கண்டதுண்டு
நிலவை உரசும் விமானம்
அடிக்கடி பார்ப்பதுண்டு
அப்பாவை பார்க்கும் போதெல்லாம்
சிறு ஏக்கம் உண்டு !
சரி தவறு தெரியாததால்
போலிஸ் ,திருடன்
இருவரில் செயிப்பவரையே
அதிகம் பிடிக்கும்
அதிலும் சிறு ஏக்கம் உண்டு
அத்தனை ஏக்கமும் நிறைவேறி
வெறுத்து துக்கப்படுகிறேன்
எதுக்குதான் பெரியவனா வளந்தேனோ
சின்ன பையனாவே இருந்திருக்கலாம்
என .
மற்றுமொரு ஏக்கம்!
உலகம் எனை ஏமாற்றுகிறதா
தெரிய வில்லை !
கருவறையில் துடித்தேன் உதைத்தேன்
உலகைகான ஏக்கப் பட்டேன்.
சில பொருளுக்காய் உணர்வுகளுக்காய்
ஏக்கப் பட்டேன் முடித்து விட்டு
மீண்டும் கருவறைக்கே ஏக்கப் படுகிறேன்
உலகம் எனை ஏமாற்றுகிறதா
தெரிய வில்லை !


Comments

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது