Skip to main content

நாத்திகம் என்பது கடவுள் மறுப்பா

 நாத்திகம் என்பது கடவுள் மறுப்பா


கடவுள் என் தூரத்து காதலியாக இருந்து விட்டு போகலாம் 

அவள் எனக்கு கடிதம் அனுப்பப் போவதில்லை 

முத்தங்களை தரப்போவதில்லை என்னை அணைக்கப் போவதில்லை என் பசியை ஆற்றப் போவதில்லை என் பணத் தேவைகள் எதையும் அவள் செய்யப் போவதில்லை


அவ்வப்போது என் உளவியலில் சமநிலை தவறுதலை வேண்டுமானால் சரி செய்து கொண்டிருப்பாள்


ஒரு தூரத்தின் சமவெளியில் பச்சை நிற சுடிதார்கள் எல்லாம் என் காதலியை ஞாபகப்படுத்தலாம் மல்லிகை வாசங்கள் எல்லாம் அவள் வாசமாகவே மாறிப்போனது


நேற்று எனக்காக பரிந்து பேசிய இரண்டு நண்பர்களை கடவுளின் தூதனாகவே நான் பார்க்கிறேன்


என் ரத்தத்தை துடைத்து பசியாற்றி என் துக்கங்களோடு பகிர்ந்து கொண்ட ஒரு சகோதரனின் பதற்றத்தில் யாரைக் காண்பது


என் துக்கங்களை விசாரித்துக் கொண்டிருந்த தோழியின் உள்ளங்கை ஈரத்தில் 

யாரை நினைப்பது....


கடவுள்கள் போதும் வருவதில்லை அவளைப் போலவே

இருவரும் ஒன்றுதான் 

பருப்பொருள் அல்ல நினைவுகள் ஏக்கங்களின் கற்பனை உருவங்கள்


நாத்திகம் கடவுள் மறுப்பா 

இல்லவே இல்லை 

நாத்திகம் மத மறுப்பு....

Comments

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது