Skip to main content

ஜனநாயகம்

 சமூக ஜனநாயகம் உருவாகாமல் அரசியல் தாக்கத்தில் பெரும்பான்மையின் அழுத்தங்களை குறைக்க முடியாது , இந்தியாவைப் பொறுத்தவரையில் சமூக ஜனநாயகம் உருவாவதற்கு இங்கு இருக்கும் பிரிவினைகளின் சிக்கல்களை தீர்த்தாக வேண்டும், இனம் சார்ந்து மதம் சார்ந்து சாதி சார்ந்து  சாதி உட்பிரிவுகள் என ஆயிரக்கணக்கான பிரிவினைகளை ஒன்று கூட்டாமல் சமூக ஜனநாயகம் சாத்தியம் இல்லை.


சமூக ஜனநாயகம் சாத்தியமில்லாமல் அரசியல் ஜனநாயகம் ஒருபோதும் சாத்தியமில்லை அங்கு பெரும்பான்மையே நிலை நிறுத்தி இருக்கும்


இந்தியா என்று ஒன்று கூடி இந்த ஆசிய துணை கண்டத்தில் சொல்ல ஆரம்பித்து எத்தனை ஆண்டுகள் ஆகியும் என்ன ஒன்று கூடல் நடந்து விட்டது ,அதேபோல் மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டும் தமிழ்நாடு பொருத்தவரையில் மொழியால் என்ன ஒன்று கூடல் நடந்து விட்டது..... இதுவரையில்  மொழி ஒரு தனிமனிதனுக்கு எந்த விதத்தில் நன்மை பயக்குறது என தெரியவில்லை, அல்லது ஒரு சமூகத்திற்கு என்ன பயனை தருகிறது எனவும் தெரியவில்லை மொழி என்பது அடையாளம் அல்ல இந்த பிரபஞ்சத்தில் உயிர் என்பதைத் தவிர ஒன்று கூடலுக்கு வேறு எந்த அடையாளங்களும் இல்லை என்பதே உண்மை... மொழி வெறும் தொடர்பு கருவி தான், ஒன்று கூடலுக்கு உயிர் மனிதம் மனிதநேயம் என்பதை தாண்டி எந்த அடையாளத்துக்குள் சென்றாலும் அது பிரிவினையின் தோற்றுவாயாக தான் இருக்கும் அது பெரும்பான்மை சிறுபான்மை என்ற தோற்றப் பிழைகளுக்குள் கொண்டு செல்லும் சாத்தியக்கூறுகளே அதிகம்.


மொழி மனித உறவுகளுக்கு இடையே பரிச தொடுதல்களுக்கு இடையே தடையாக இருக்கும் பட்சத்தில் உடைக்கப்பட வேண்டியது தான்.

Comments

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது