விசமேறும் ஒரத்த பாளயம் அணை யார் பாதுகாப்பது ?
மேற்க்கு தொடர்ச்சிமழையில்
உற்ப்பத்தியாகி பேரூர் கோயமுத்தூர் திருப்பூர்
சென்னிமலை அஞ்சூர் வழியாக 174 கிலோமீட்டர் பயணம் செய்து காவிரியில் கலக்கும் நொய்யல்
நதி விவசாய பயன்பாட்டிற்க்காக ஒரத்த பாளயம்
அணை 1984ல் ஊத்துக்குளி பக்கத்தில் ஒரத்தபாளயத்தில் 17 கோடி ரூபாய் செலவில் 2.290 கிலோமீட்டர்
தொலைவிர்க்கு அணையானது 1992ல் கட்டப்பட்டது இதனால் நேரடியாக பாசனத்தை ஈரோடு மாவட்டத்தில்
500 ஏக்கருக்கும் அதேபோல கரூர் மாவட்டத்தில் அதிகமாக 9875 ஏக்கரும் பயன்பெரும் வகையில்
கட்டப்பட்டுள்ளது கட்டிய சில ஆண்டுகளுக்கு
விவசாயிகள் கனவு கண்டதைப்போல ஓரளவு பயன்பட்டுக்கொண்டிருந்த அணை எந்த உயிரினமும் வாழ
தகுதியற்ற விசமாக மாறிப்போனது திருப்பூரின் லாப வெறியே, விவசாயத்தையும் குடிநீரையயும்
கொன்றுவிட்டது 1990 வாக்கில் 90ராக இருந்த சயப்பட்டரைகள் 2004ஆம் ஆண்டு 800க்கும் அதிகமானது
இவைகலில் பெரும் பாலனவை அரசு நியமித்த சட்டங்களின் படி 3 கிலோமீட்டருக்கு அப்பால் கட்டப்படவில்லை, இதை ஆளும் அரசுகளும் கண்டும் கண்டுகொள்ளாமல் இன்றும்
இருக்கிண்றன, பல விதமான பயிர்களும் காய்களும் விளையும் விவசாய நிலம் தன் கருவரையை இழந்து மலடாக
நிற்க்கிறது விவச்சயிகளும் ஜீவனற்று உள்ளனர், அணையை பார்க்க அருகில் சென்றபோதுதான்
அதன் விபரீதத்தின் கொடுமை புறிந்தது உலகின் ஒட்டு மொத்த அசிங்கமும் சேர்ந்த நாற்றம்
கொடுமையின் உச்சம் என்றுதான் சொல்லவேண்டும் , நொய்யலின் வேதனைக்கு திருப்பூர் மக்கள் சென்னையை போன்று ஒருநாள் பதில் சோல்ல வேண்டியிருக்கும்,
ஆற்றின் நீரை பயன்படுத்தும் யாவரும் தொலு நோய்க்கு உள்ளாவதை சமீபத்திய ஆய்வுகள் நிரூபித்துள்ளது கால் நடைகள்
யாவும் மடுவில் பாலை இழந்து விட்டன அவைகளுக்கு
மலட்டுதன்மையும் அதிகரித்து வருகிறது ஏன் இத்தண்ணீரை தொடர்ந்து மனிதன் பயன்படுத்தும் போது மலட்டு தன்மைக்கு
உள்ளாவது நிச்சயம், கண் எரிச்சல் தோல் நோய் சிறுநீரகபாதிப்பு போன்றவை இருப்பது கண்டரியப்புட்டுள்ளது
இது போன்ற நச்சுக்கலிவுகள் தொடரும் பச்சத்தில்
வாழ த்குதியில்லாத நகரமாக திருபூர் மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. விவசாயிகலே அனையிணை
திரக்க வேண்டாம் என்று போராட்டம் நடத்தினர்
அப்படி திறந்தால் பாதிப்பு இன்னமும் அதிகமாகும் என கூறினர், திறந்து விட்டால்
காவிரியிலும் நச்சுயேரறும்அதன் சுற்றுவட்டார விவசாய நிலங்களும் பாழ்படும் என்றனர்.
நீதி மன்றங்கள் என்ன ஆணியிட்டும் சுத்திகரிப்பு நிலையக்கள் கட்டப்படாத சாயப்பட்டறைகள்
இயங்கிதான் வருகின்றன, நாம் நதிகளை நஞ்சாக்குவது இந்தபூமிக்கு இரத்த புற்று நோயை உண்டாக்குவதாகும்,
இதுவும் கொலைதான் ஒட்டு மொத்த சமூக கொலையாகும் வெறும் பணத்திற்க்காக நம் சந்ததிகளின்
வாழ்வாதாரத்தை அழித்து கொண்டிருக்கிறோம், நீர் என்பது அணைவருக்குமான சொத்து உரிமையும்
கூட எந்த தனி நபர்களும் தனியார் நிருவனங்களும் உரிமை கொண்டாடமுடியாது இனன்மும் சில ஆண்டுகளில் தண்ணீரானது காத்திருந்து
அதுவும் அதிக விலை கொடுத்து வாங்கும் பொருளாக மாறும். இன்றே பாதி இடங்களில் அவ்வாருதான்
உள்ளது, தண்ணீர் ஒரு மூன்றாம் உலகப்போரை கூட உருவாக்கலாம் இந்த உலகில் இரண்டு பில்லியன்
மக்கள் சுத்தமான தண்ணீர் இல்லாமல் வாழ்கின்றனர்.
இந்தியாவில் உள்ள 75% ஆறுகளும் ஏரிகளும் குளிக்க கூட பயன் படுத்த முடியாத அளவுக்கு
கெட்டுப்போய் உள்ளன. இந்தியாவில் 700 மில்லியன் மக்கள் போதுமான சுகாதாரத்தை பெறவில்லை
அசுத்தமான தண்ணீரை பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு வருடமும் 2.1 மில்லியன் இந்தியக்குழந்தைகள்
இறக்கிரார்கள் என்று ஆய்வு கூறுகிறது (மாட் விக்டோரியா பார்லோ). ஒரு நல்ல தண்ணீரில்
கனிமங்களான புளோரைட் துத்தநாகம் தாமிரம் இரும்பு மக்னீசியம் என ததூக்கள் நிரைந்து காணப்படும்
ஆனால் இந்திய நாட்டில் மத்திய நீர் வளத்துறை அறிவித்தப்படி நாட்டில் பெரும்பாலான ஏரி
ஆறுகளில் நைட்ரேட்டும் புளோரைடும் குப்பைகள் மற்றும் தொழைற்ச்சாலை கழிவுகளால் அதிகரித்து
காணப்படுகிறது. 80% நோய்கள் மாசுபட்ட தண்ணீரால் தான் வருகிறது தண்ணீர் உயிர்களின் ஜீவனாகும் தண்ணீரின் மகிமையினை,
தண்ணீர் கெட்டுப்போவதின் ஆபத்தினை உணராமல் நாம் நதிகளை அசுத்தப்படுத்திக்கொண்டு பணம்
மட்டும் சம்பாதிப்பதில் பயனேதும் இல்லை, திருப்பூரின் நொய்யல் குருக்கே உள்ள அணையினை
சுத்தம்செய்ய மக்களும் அரசும் முன்வர வேண்டும், சாயப்பட்டரைகளை தொடர்ந்து கண்காணிப்பது, மற்றும் அணைக்குள் தேங்கி நிற்க்கும் ரசாயன கழிவுகளை தூர் வார வேண்டும் அதிக அளவு ஆக்சீஜனை
உற்ப்பத்தி செய்யும் தாவரங்களை வளர்க்க வேண்டும், கெட்டுப்போன நிலங்களை மாற்றுருவாக்கம்
செய்யவேண்டும், இதனை துரிதப்படுத்தி செய்தால் மட்டுமே நொய்யலையும் திருபூரையும் காப்பாத்தமுடியும்
, ஒரு கிலோ காட்டன் தயாரிக்க 30000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது நாம் உண்ணும் ஒவ்வொரு
உணவிலும் தண்ணீரின் பயன் பாடு உள்ளது, இந்தியாவும் இப்படி எவ்வளவு நீரை ஏற்றுமதி செய்கிறது
என பாருங்கள் திருப்பூரில் ஏற்றுமதியாவது வெறும்
ஆடைகள் அல்ல நீரின் பெரும் பகுதி. எற்றுமதி என்பது வெறும் பொருளல்ல தண்ணீரின்
பெரும் பங்கும் உள்ளது.. நீரின் தேவை அறிந்து வரும்முன் காப்பதே சிறந்தது…… அன்றைய இன்பத்திற்க்காக நிலையான செல்வத்தை அழிப்பது
என்ன ஞாயம்?

Comments
Post a Comment