வெண் பகலும் சரி கும்மிருட்டும் சரி
பாதைகளில் நடப்பதே இல்லை
கால்களுக்கு தடம் தோனுவதில்லை
வரும் போகும் இடமெல்லாம்
வெறும் நிகழ்வோ ,அனுபவமோ
ரசித்து விடுகிறேன் !
சுருங்கிய கால வெளியில்
காண்பதெல்லாம் இரைப்பைக்கு சொந்தம்
கை இடுக்கின் மயிர் போல
பின் நூற்றாண்டுகள் கழிந்து விடுகின்றன
முன் வருவதென்னவோ பொய் எனினும்
பதின் பருவ குறிதேடல் போல
உள்ளம் வெடவெடுக்கிறது
ஒலி அற்ற நகர்வில்
ஓராயிரம் அலறல் இருக்கிறது !
உண்மை சிதறி கிடக்கிறதோ
பொய்யான உண்மையாய்
உண்மையான பொய்யாய்
அசைவற்ற நகர்வாய்
அழும் சிரிப்பாய்
முரணாக கிடக்கிறதோ...............

Comments
Post a Comment