Skip to main content

வலிக்கும் ஆயினும் இன்பமாய் இருக்கும்













அன்பைப் போல் அதிகாரம் செலுத்துவது ஒன்றுமில்லை
கொடியதுமதுதான்,
அது எதிர்பார்பதில்லை 
தன்னையே வருத்திக்கொள்ளும் 
தன் தேவைகளுக்காய் செய்யாமல் தருவதிலேயே இன்பம்காணும் 
செய்வது கர்வமெனினும் எதிர் பார்ப்புகள் இல்லாததால் அன்பாகிறது இன்பமாகிறது 
அழும் அழவைக்காது.
நேசித்து பாருங்கள் அதை விட அழகானது ஒன்றுமில்லை 
உள்ளே நரம்பின் அணுக்களில் குடையும் 
வாழத்தொன்றும் ,வலிக்கும் ஆயினும் இன்பமாய் இருக்கும் 
பைத்தியத்தின் முத்திய நிலை அன்புதான் 
அது தெய்வீகமானது ,கிறுக்கு மிகவும் உயர்ந்தநிலையில் ஓன்று
ஒன்றின் மீது உள்ள பற்றோ ,ஆசையோ ,ஈர்ப்போ,கவர்ச்சியோ அல்ல 
காந்தம் போன்றது அன்பு அனைத்தையும் உள்ளிழுத்துக்கொள்ளும் அரவணைக்கும் 
அதிகாரம் செலுத்தாது அபபடிசெலுத்துவது சுயனலமாகும் தொற்றுபோகும்.
கட்டுப்பாடுகள் இருக்காது கவலைகொள்ளாது கண்ணீரையே விரும்பும் 
அசிங்கம் தெரியாமல் காயத்தில்  வடியும் சலத்தை நக்கும் நாயைப் போன்றது அன்பு 
எதுவும் தெரியாது அதனால் தான் சொன்னேன் அன்பு பைத்தியமென்று 
உள்ளே நுழைந்து பாருங்கள் துக்கமேன்பதே இல்லை 
மொத்த தத்துவமும் அன்புதான் 
சேமிப்பு என்பது இல்லாமல் வாழ்ந்தோமானால் 
அன்றைக்கு தேவை யானதை (உணவு) அன்று உண்டுவாழ்ந்தால் 
தெய்வமாவோம் .
அழகை ரசித்து என்ன வாகப்போகிறது 
உண்டு மகிழ்ந்து என்ன 
புன்னகை என்பது மாயை வாழ தூண்டும் ஒரு உணர்வுதான் 
நான் உண்மையிலேயே என்னை நேசித்தால் மற்றவனையும் 
நேசிப்பேன்.
அன்புசெய்து ஒன்றுமாக போவதில்லைதான் அப்படி அன்பு 
செய்யவில்லை என்றால் நான் என்னை நேசிக்கவில்லை நான் என்தேவை
களுக்காக மட்டும் செய்யும் போது பொய்த்து விடுகிறது. 
காமம் எதற்கு அதனால் என்ன 
நாம்  வாழ்ந்துதான் என்னசெயகிறோம் செய்யப்போகிறோம் 
இது வெறுப்பல்ல பொதுவுடைமையின் தாக்கம் அன்பின் மறுவுருவம் 



Comments

  1. கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு

    ReplyDelete
  2. யோசிக்கவேண்டிய அழகான விஷயம் நன்றி....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருச்சியில் 4 கோடி ரூபாய் கடத்தல் தங்கம் காருடன் பறிமுதல். நபர்கள் கைது.

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டிகள், திருச்சி வழியாக சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி சமயபுரம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு காரில் 3 சூட்கேஸ்களில் சுமார் 7.5 கிலோ அளவுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது. அந்த தங்க கட்டிகளையும், அவர்கள் வந்த காரையும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்த முகமது இர்பான், அஜ்மல் கான் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். தங்கக் கட்டிகளை சென்னையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அந்த நகை வியாபாரி யார் என்பது குறித்தும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கக் கட்டிகள் எப்படி கொண்டு வரப்படுகிறது, இதற்கு யார் உதவுகிறார்கள் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது
நான் இந்த உலகத்திற்கு கடன் படவில்லை காரணம் நான் நானாக வரவில்லை இங்கே எனக்கு எதுவும் கடனாய் கிடைப்பதும் இல்லை நான் கடன் கொடுப்பதும் இல்லை காற்று நிலம் நீர் நெருப்பு என அனைத்தும் இலவசமாகவே கிடைக்கிறது, நான் சுதந்திரமாக வந்தவன் ஒன்றுமில்லாமல் பிறந்தவன் ஆனால் பசியோடு மட்டும் பிறந்தேன் எனக்கு அரவணைப்பு தேவை இல்லை அன்பு தேவை இல்லை கோபம் இல்லை ஆனால் இந்த வாழ்க்கை சாகவே பிறந்தாற்போல் உள்ளது எனக்குள் தற்கொலை எண்ணத்தை விதைத்தது யாரோ மிருகங்களை போல் குழந்தையை போல் அன் நேரம் மட்டும் பயந்து விட்டு போகவே ஆசைபடுகிறேன்