Skip to main content

திருவிளையாடற் புராணம்

திருவிளையாடற் புராணம் 

1.
தடாதகைப்‌ பிராட்டியார்‌ திருவவதாரப்‌ படலம்‌ 
மலயயைத்துவச பாண்டியன்‌ பண்பு ;

மலயத்துவச பாண்டியன்‌ மனுநூலில்‌ கூறிய ௮றநெறி தவறாது செங்கோல்‌ செலுத்துபவன்‌ ; ஒழுக்கம்‌ நிறைந்தவன்‌ ; 
வெற்றியை ௮ணிகலமாகக்‌ கொண்டவன்‌…
**********

2.
வங்கியசேகர பாண்டியனின்‌ ஆட்சிமுறை;

பின்னர்‌ சந்திரன்‌ மரபாகிய பாற்கடலுள்‌ அறுபத்து 
நான்கு கலைகளோடும்‌ விளங்‌கித்‌ தோன்றும்‌ முழுமதிபோல வங்கிய சேகர பாண்டியன்‌ என்னும்‌ அரசன்‌ தோன்றினான்‌. 
௮வன்‌ சோமசுந்தரக்‌ கடவுளின்‌ திருக்கோயிலைச்‌ சூழ ௮ழகிய
சிறு நகரம்‌ ஓன்றை அமைத்து, அதில்‌ இருந்துகொண்டு 
௮ரசு நடாத்தி வந்தான்‌. ௮வன்‌ மனு வழியே செங்கோல்‌ 
செலுத்தினமையால்‌ கலி என்னும்‌ பகைவன்‌ புறங்காட்டி 
ஓடத்‌ தன்னாடு எங்கும்‌ பல வளங்களைச்‌ சுரக்க, மக்கள்‌ நாடோறும்‌ பெருகினார்கள்‌.

3.
வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்;
௮வர்‌ வேத முறைப்படி 
கர்ணவேதன முதலிய மற்றைச்‌ சடங்குகளெல்லாம்‌ நிறையப்‌ பெற்று இளம்பிறை வளர்வதுபோல வளர்ச்சியடைந்தார்‌. 
வேத முதலான அறுபத்து நான்கு கலைகளையும்‌ பதினாறு வயதளவில்‌ கற்றுணர்ந்தார்‌. இத்‌ திருவாதவூரருடைய கல்வித்‌ திறமை முதலியவற்றை அறிந்தவர்‌ போய்ச்‌ சொல்ல 
அரிமர்த்தன பாண்டியன்‌ அதனைக்‌ கேட்டு அவரைக்‌ தன்பால்‌ வரவழைத்து, அவர்‌ உள்ளம்‌ மகிழுமாறு பல வரிசைகள்‌ 
அளித்துச்‌ சிறப்புச்‌ செய்து, அமைச்சர்‌ பதவியினையும்‌ அளித்தான்‌. திருவாதவூரர்‌ படைக்கலப்‌ பயிற்சி முதலியன 
உணர்த்தும்‌ நூல்களையும்‌, மனு சாத்திர முதலிய நீதிகளையும்‌ ஐயந்‌ திரிபு நீங்க முற்றக்‌ கற்றுணர்ந்தார்‌; அதனால்‌ மற்றைய 
மந்திரிமார்‌ எல்லாரினுஞ்‌ இறந்து : முதன்‌ மந்திரியானார்‌. 

4.
மழவுருநீத்‌(து) அடலேற்றின்‌ வருவார்தம்‌ 
இடத்தணங்கின்‌ மனுவை ஓகிப்‌ 
பழகியபார்ப்‌ பனமகளைப்‌ பார்ப்பதியின்‌ 
வடி.வாக்கிப்‌ பலருங்‌ கண்டு 
தொழவிடைமேல்‌ ஏற்றிவிசும்‌ பாருக 
மலர்மாரி சுரர்கள்‌ தூற்ற 
அழகர்‌எழுந்‌ தருளினார்‌ ; களிதூங்கி 
அதிசயித்தார்‌ அவனி மாக்கள்‌. 

5.திருமணப்‌ படலம்‌

காஞ்சனையின்‌ கவலை;

சூரியன்‌ துன்பமாகிய இருளைப்‌ போக்கவும்‌, 
வெண்குடையாகிய சந்திரன்‌ நிழலைச்‌ செய்யவும்‌, உலகங்களை யெல்லாம்‌ ஈன்ற தாயாகிய உமாதேவியார்‌ இளங்‌ கன்னியாக 
இருந்து மனுநூல்‌ வழி தவறாது ௮ரசு புரிந்‌துவருங்‌ 
காலத்திலே,'திருமணம்‌ செய்யும்‌ பருவம்‌ வந்து பொருந்தியது. 




Comments

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது