Skip to main content

1940

யூதர்களே 1940 களில் உங்கள் மீது திணிக்கப்பட்ட வன்முறையை எதிர்த்து பாஸிஸ்ட்டுகள், நாஜிக்கள், போர் வெறியர்கள் தவிர்த்து ஜனநாயகத்தை, சமாதானத்தை விரும்பிய வர்களின் உலகமே உங்கள் பக்கம் நின்றது. 

நீங்கள் 60 லட்சம் பேர் பாசிச ஆரிய இன வெறியால் மிகக்கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டீர்கள்.. அந்த துயரை உங்களோடு சேர்ந்து உலகமே அனுபவித்தது. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நூற்றுக்கணக்கான திரைபடங்கள் லட்சோப லட்ச கண்டனங்கள். உங்களை இன்னலிலிருந்து மீட்க எத்தனை ஆயிரம் நேசப்படைகள் தங்கள் இன்னுயிரை தந்து உங்களில் எஞ்சியவர்களை மீட்டனர் என்பதை மறந்த சமூகமாக மாறிவிட்டீர்களே இது எவ்வளவு பெரிய வரலாற்று துயரம், 

பல ஆயிரம் ஆண்டுகளாக நாடற்று பல நாடுகளில் உங்களை தக்க வைத்துகொண்ட வரலாறுகளை மறந்துவிட்டீர்களா? இரண்டாம் உலகப் போரின் முடிவு நேசப்படைகளுக்கு சாதகமாக அமையாமல் போயிருந்தால் யூதர்களின் இருப்பு இந்த பூமியில் என்னவாக இருந்திருக்கும்? இந்த வரலாற்றுக் கேள்வி எவ்வளவு பயங்கரமானது

(உங்களுக்கு விடுதலை தர வந்த யூதர்களின் அரசன் என்று தன்னை சொல்லிக்கொண்ட இயேசுவால் முடியாததை) 1947ல் யூத மக்களுக்கு சொந்தமாக ஒரு நாடு வேண்டும் என்பதற்காக பாலஸ்தீனத்தின் 56% நிலத்தை தனியாகப் பிரித்து உங்களை அதில் குடியேற்றம் செய்து அதற்கு இஸ்ரேல் என பெயரிட்டதை சனநாயக மாண்புள்ள அன்றைய இந்தியா அதை எதிர்த்தது வரலாறு. ஆனால் 1950ல் அதை அங்கீகரித்தது என்பதும் வரலாறு. 

அந்த காலம் முதலே நீங்களும் இன வெறியாளர்களாக மாறிவிட்ட அநீதியை உங்களால் உணர முடிகிறதா இல்லையா? உங்கள் வரலாற்று துயரத்தை 1934- 1945 பொறுக்க முடியாத லட்சக்கணக்கானவர்களில் ஒருவனாக நானும் கூட ஒரு முழு நாவலையே மரப்பாலம் எழுதியிருக்கிறேன். இப்போது எழுதிக்கொண்டிருக்கிற நாவலிலும் அந்த துயரங்களை பதிவு செய்திருக்கிறேன். என்கிற ஆதங்கத்தில் என்னால் கேட்க முடியும். 

வரலாற்று காலம் முதலே அந்த நிலத்துக்கு சொந்தக்காரர்களான பாலஸ்தீனியரை அழித்தொழிக்கும் இன வெறியர்களாக நீங்கள் மாறியது சரியா? பல்லாயிரம் பாலஸ்தீனியரை கொன்று, பல நூறு கிராமங்களை அழித்து, பாலாஸ்தீனத்தின் 78% நிலபரப்பை உங்களுக்கு சொந்தமாக்கிக்கொண்டது சரியா? தற்போது வெறும் 7 சதுர கிமீ எல்லைக்குள் பாலாஸ்தீனியரை முடக்கியது நியாயமா? 2008க்கு பிறகான தாக்குதலில் மட்டும் ஏறக்குறைய 1.5 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற சுதந்திர நாட்டை உருவாக்கிய ஐக்கிய நாடுகள் சபை பாலாஸ்தீனத்துக்கான நியாயத்தை வழங்குவதில் என்ன நியாயமாய் நடந்திருக்கிறது. வளைகுடா பகுதியின் ரவுடியாக இஸ்ரேல் மாறியிருக்கிறது அதற்கு அமெரிக்கா உடந்தை. 

இப்போது நடக்கும் சண்டையில் போர் குற்றங்களில் இஸ்ரேல் ஈடுபடுகிறது. வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசுவது, நிவாரணமுகாம்கள் மீது குண்டு வீசுவது, மருத்துவ ஆம்புலான்சுகள் மீது குண்டுகள் வீசுவது…. பாலஸ்தீனியர்களின் நிலப்பரப்பையும் சேர்த்து அகண்ட இஸ்ரேல் என அறிவிப்பது இதெல்லாம் வரலாற்று பிழை இல்லையா?  இதற்க்கெல்லாம் போர் தீர்வா? அப்பாவி மக்கள் இருபக்கத்திலும் கொல்லப்படுகிறார்கள். போருக்கு வெளியே உள்ள மக்கள் நிலைமைகளை சரியாக புரிந்துக்கொள்வதன் மூலம் நியாயத்தின் பக்கம் உலகம் அணி திரள வேண்டும் போர் நின்று சமாதனத்துடன் நியாயங்களும் சனநாயக வழியில் தீர்க்கப்பட வேண்டும்.

Comments

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது