Skip to main content

பசிக்கிறது


உலக நாடுகளே உங்கள்
பொரருளாதார சண்டையையும் ஆசையையும் விட்டுவிடுங்கள்
எனக்கு பசிக்கிறது .
உங்கள் ஆடம்பர கட்டிடங்களையும்
கார்களையும் நிறுத்துங்கள்
அனுஆயுதங்களையும் ஆடைகளையும் புதையுங்கள்
எனக்கு பசிக்கிறது.
உங்கள் கடவுள்களைகொன்று விடுங்கள்
கவிதைகளையும்
கட்டுரைகளையும் அறிவியலையும்
காலகடத்து கருவியையும் அனுதாபத்தையும் உடைத்தெறியுங்கள்,
எனக்கு பசிக்கிறது.
உங்கள் அழகியலையும் ஆண்மையையும் ஒதுக்கி வையுங்கள்
வீரத்தையும் வரலாறையும் எறித்து விடுங்கள்
சடங்கையும் சம்பரதாயத்தையும்
ஒழுக்கத்தையும் மிதித்து தள்ளுங்கள்
எனக்கு பசிக்கிறது.
உங்கள் அழுகையும் கருத்துரையும்வேண்டாம்
உங்கள் இரக்மெல்லாம் எங்கள்
தொடை இடுக்கு வரைதான்
தயவுசெய்து வழிவிடுங்கள்
எனக்கு பசிக்கிறது.

Comments

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது