Skip to main content

The first experience


அவள் வரும் சின்னஞ்சிறு பாதையில்
அக்குறுகிய நேரத்தில்
முத்தமிட நினைக்கையிலேயே
பாதையோ முடிவடைந்து விடுகிறது ,
ஒரு தனியறையில்
முதலாய் அவள் வாசமும்
ஸ்பரிச தொடுதளிலும்
சலனம் இல்லாமல் சப்தம் இறந்து விடுகிறது
முத்தத்தின் இசை மட்டும்
வளர்ந்து கொண்டே இருக்கிறது  

Comments

Popular posts from this blog

பாவம் செய்ய பிறந்தவன் பாதைகளற்ற வாழ்க்கையில்  பாவங்களை சுமந்து  மோட்சத்தின் வழிதேடும் மதங்களே,  தயவு செய்து விலகுங்கள் . மனிதன் பாவம் செய்ய பிறந்தவன். தெய்வங்களே ! கோமணம் கட்ட முயற்சிக்க வேண்டாம் ஒவ்வொரு தனிமையிலும் _எங்கள் கோமணம் அவிழ்க்கப்படுகிறது 

நிலா பேசுகிறது

என் சதைகளை தின்னுவான் பேயுமல்ல என் தனிமையில் கிச்ச மூட்டுவான் தென்ற்றளுமல்ல மிகச்சாதரணமானவன் தான் ஆனால் மகத்தான இழுப்பு விசை கொண்டவன் அவன் தூர சைகையிலே என் ஆடை கலந்து விழ துடிக்கும் என் முளை நசுங்க அணைத்திட ஆசைதான் என்னவோ பயமுறுத்துகிறது அவன் தொடுகையில் நிலா பேசுகிறது சூரியன் கத்துகிறது நட்சத்திரங்கள் கிசுகிசுக்கிறது ரத்தம் சூடேறி அவனை நரபலி கேட்கிறது

நிலவு பயணம்

என் நிலவு பயணம் முதன் முறையாய் உள்வாங்க பட்ட நிலா உருவம் தாயின் கண்கள் பின் அது வானம் ஏறியது! என் பசிக்காக விளையாடு பொருளானது தூங்குவதற்காக அங்கே பாட்டியும் ஏற்றப்பட்டால் வடையும் சுட்டாள் உயிர்வழில்லாத நிலவில் சிறிது நாளில் ஆச்சரிய இடத்திற்கு வந்தது தொட்டு பார்க்கவும் இறங்கினடக்கவும் ஆசையை வழர்த்தது பல நாள் கழித்து பாவையை ஒத்திருந்தது காதலுக்கு தூதுவனோ என தோன்றியது பளிங்கு முகம் வழியே வெளிக்கொணர்ந்தது அவள் நினைவை காலம் உருண்டோட என் மகன் பக்கம் திரும்பி விட்டது